DSP தாத்தா - என் காவல்துறை அனுபவங்கள்
நன்றி - ஆ. சிவசுப்பிரமணியன்
என் காவல்துறை அனுபவங்கள்: 1
( டி.எஸ்.பி குடும்பம் என்ற பெயரிலான வாட்ஸ்அப் குழுமத்தின் மூலவரான திரு.அ.ராமலிங்கம் பிள்ளை காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து துணைக்கண்காணிப்பாராக ஓய்வு பெற்றவர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அவரது பணிக்கால அனுபவங்களை அன்னாரது கூற்றாக இனிப்படிக்கலாம்).
என் காவல்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் முன், முதலில் என்னைப்பற்றி சில செய்திகள்.
வைணவத்தலமான யூ_வில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கிருஷ்ணன்கோவில் என்ற ஊர் உள்ளது. அதற்கு மேற்கில் உள்ள பெரிய கிராமம் வத்திராயிருப்பு. வத்திராயிருப்புக்கு மேற்கில் மலையடிவாரத்தில் உள்ள வளமான கிராமம் உமாபட்டி.
என்னுடைய குடும்பம் சம்பிரிதிப்பிள்ளை வீடு என்றழைக்;கப்பட்ட குடும்பம். சம்பிரிதி என்றால் தலைமைக்கணக்கர் என்று பொருள். அக்காலத்தில் இது உயர்ந்த பதவி
என் தந்தையார் திருவாளர் அருணாசலம் பிள்ளை ஒரு நிலக்கிழார். தென்னந்தோப்பு நன்செய், புன்செய் நிலங்கள், உழவுமாடுகள், பசுமாடுகள் என ஒரு நிலக்கிழாருக்குரிய அனைத்து வளங்களும் நிரம்பப் பெற்ற குடும்பம். எனக்குப் படிப்பில் ஆர்வம் மிகுதி. அருகில் உள்ள வத்திராயிருப்பில்தான் உயர்நிலைப்பள்ளி இருந்தது. என் ஊருக்கும் வத்திராயிருப்புக்கும் ஊடே வாய்க்கால் ஒன்றுண்டு. நான்படிக்கும்போது அதில் பாலம் கிடையாது. வாய்க்காலில் வெள்ளம் வரும்போது நீந்திச் சென்றுள்ளேன.
மதுரை அமெரிக்கன் கல்லூhயிpல் கல்லூரிப்படிப்பை முடித்தேன். அங்கு படிக்கும்போது தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. மதுரையின் காங்கிரஸ் பிரமுகரான வைத்தியநாதஅய்யர் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்த அமெரிக்கன் கல்லூரிமாணவர்களுள் நானும் ஒருவன் கதர்ஆடை அணியவும் செய்தேன். இது ஒரு பக்கம் என்றால் காவல் துறையின் காக்கிச்சீருடை மீதும் எனக்கு ஈர்ப்பு இருந்தது. முதலில் கலால் துறையில் பணியில் சேர்ந்த நான் இவ் ஈர்ப்பின் காரணமாக அப்பணியைத் துறந்து காவல் துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தேன். இப்பணியில் நான் சேர்ந்த காலத்தில், பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானதென்று, உதவி ஆய்வாளர் பதிவிக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நானோ பி.ஏ.பட்டதாரியாக இப்பணியில் சேர்ந்தேன். என்னைப் போலவே இப்பணியில் ஆர்வம் கொண்டிருந்த ஒரு சிலர் பட்டபடிப்பு முழத்துவிட்டு வந்திருந்தனர். ஆனால் என் தாய்க்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. நம் வீட்டில் வேலை செய்யப் பலர் இருக்கும்போது. நீ ஏன் அடுத்தவரிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டும் என்று கூறி இதற்குத் தடைபோட்டார். இது நில புலன்களுடன் வசதியாக வாழ்ந்த அக்காலக் கிராமப்பெண்களின் கருத்தாகும். என்றாலும் இதை மீறி நான் பயிற்சிக்குச் சென்றேன். பின் பயிற்சியை முடித்து உதவி ஆய்வாளரகச் சேர்ந்தேன்.
என் காவல்துறைப் பணி அனுபவத்தில் நான் பெற்ற அனுபவங்களுள் ஒன்றிரண்டு அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவது, குலசேகரன் பட்டினம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய போது நான் எதிர்கொண்ட ஒரு கொலை வழக்கு.
தொடரும்…
காக்கிச் சட்டை அணிந்து காவல்துறையில் நான் பணியாற்றிலும் அப்போதைய தேசிய இயக்கத்துக் காங்கிரஸ் காரனாகவே மனதளவில் நான் இருந்து வந்தேன்.
இம்மனநிலையில்தான் குலசேகரன் பட்டடினம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தேன்.
…
திருச்செந்தூருக்குத் தெற்கில் உள்ள ஒரு பெரிய ஊர் குலசேகரன் பட்டினம். கடற்கரை ஊரான இவ்வூர் ஒரு காலத்தில் துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது. நான் சென்றபோது தற்போது தூத்துக்குடியில் காணப்படும் பெரிய தோணிகள் அங்கும் இருந்தன. வெங்காயம், கருவாடு என்பன தோணிகள் மூலம் கொழும்பு நகருக்கு ஏற்றுமதி ஆயின. சுpறிய அளவில் உப்பளங்களும் இருந்தன. ஊரைச் சுற்றிலும் பனைமரங்கள் கூட்டமாக வளர்ந்து பனைமரக்காடாக விளங்கியது. இதனால் கருப்புக்கட்டி, சில்லுக்கருப்புக்கட்டி காய்ச்சும் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. சைவப்பிள்ளைமார், சைவச் செட்டியா, ஆதிதிராவிடர், முஸ்லீம்கள், யாதவர் என்ற சாதியினர் இங்கு அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் கொழும்பு நகருடன், வாணிபம் செய்தோ, அங்கு வேலை செய்தோ வாழ்ந்து வந்தனர். அக்காலத்திய கிராமங்களோடு ஒப்பிடும் போது வளமான ஊராகவே குலசேகரன் பட்டினம் விளங்கியது. இதனால் சண்டை சச்சரவுகள் குறைவு. காவல்துறைக்கு அதிகவேலை கிடையாது.
சுற்றிலும் உள்ள கிராமங்களில் நாடார் சாதியினர் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் கொழும்பு நகருடனும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுடனும் வியாபாரத் தொடர்பு கொண்ட வியாபாரிகள். மற்றொரு பகுதியினர் தம் சொந்தப் பனைகளில் இருந்தோ, பிறசாதியினருக்கு உரிமையான பனைகளில் இருந்தோ பதநீர் இறக்கி, கருப்புக் கட்டி தயாரித்து வந்தனர். மதுவிலக்கு நடைமுறையில் இல்லாததால் கள் இறக்கி விற்பதும் வெளிப்படையாக நடந்து வந்தது.
குலசேகரன் பட்டினத்திற்கு அருகில் உள்ள அழகான கடற்கரைக் கிராமம் மணப்பாடு இங்கு வாழ்ந்த பெரும்பாலான சாதியினர் பரதவர்கள். இவர்கள் அனைவருமே கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். இவர்களில் கணிசமான பகுதியினர் மீன்பிடித்து வந்தனர். ஒரு பகுதியினர் கொழும்புடன் வியாபாரம் செய்ய கொழும்பு நகரிலேயே தங்கிவிட்டனர். இவர்களது வீடுகள், சிறு மாளிகைகளாகவே காட்சி அளிக்கும். மின்சாரம் இப்பகுதியில்
அறிமுகம் ஆகாத அக்காலத்தில் இவர்கள் பெரிய அளவில் ஜெனரேட்டர் நிறுவி தங்கள் வீடுகளுக்கு மட்டும் மின்சாரம் பெற்று வந்தனர். காங்கிரிட் தளத்துடன் கூடிய டென்னிஸ் கோர்ட் ஒன்றையும் தங்களுக்கென்று நிறுவியிருந்தனர்.
ஊரின் தெற்கில் உள்ள மணல் மேட்டுப் பகுதியில் ஒரு பக்கம் நாடார்களும் ஆதிதிராவிடர்களும் வாழ்ந்தனர். பனைசார்ந்த தொழில்களை நாடார்களும், கடலில் சிப்பி அரித்தெடுத்து சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலில் ஆதி திராவிடர்களும் ஈடுபட்டு வந்தனர். இதையெல்லாம் நான்விரிவாகச் சொல்வதற்குக் காரணம் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள், எந்தச் சாதியினராக இருந்தாலும் ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்ந்து வந்தனர் என்பதை வெளிப்படுத்தத்தான். தொழில் சார்ந்த, குடும்பம் சார்ந்த சிக்கல்களை அவ்வச் சாதியினரின் சாதிப் பஞ்சாயத்தோ ஊர்ப்பஞ்சாயத்தோ தீர்த்து வைத்துவிடும். இதனால் காவல் துறைக்கு அதிக வேலை கிடையாது. அதிக வேலைப்பளு இல்லாத காவல் நிலையங்களுள் ஒன்றாக குலசேகரன்பட்டினம் அப்போது விளங்கியது. திருட்டு வழக்குகள் ஓரளவு பதிவாகும்.
என் மேலதிகாரிகளான ஆய்வாளரும், துணைக் கண்காணிப்பாளரும் தொலைவில் இருந்தனர். யூ_வைகுண்டம் ஊரில் ஆய்வாளர் அலுவலகமும் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகமும் இருந்தன.
குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியே உதவி ஆய்வாளருக்கான வீடு இருந்தது. அப்போது குற்ற பரம்பரைச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் அச்சட்ட எல்லைக்குள் அடங்கிய ஆண்கள் இரவில் காவல் நிலையத்திற்கு வந்து வருகைப்பதிவு தந்துவிட்டு காவல் நிலையத்தி;ன் முன்பு படுத்துறங்குவர். இரவில் அவர்கள் எழுந்து செல்லவிடாது கண்காணிக்க வேண்டும்.
காவல் நிலைய எல்லைக்குள் வரும் சுற்றுப்புறக் கிராமங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதுடன் சற்றுத் தொலைவிலேயே அவை அமைந்திருந்தன. சைக்கிளில்தான் செல்லவேண்டும். இது சற்றுக் கடினமான ஒன்று. குறிப்பாக குலசேகரன் பட்டினத்தில் இருந்து பெரியதாழைக்குச் செல்வது. இவ்வூரில் பல்வேறு நண்பர்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தனர் என்றாலும் இவர்களுள் இருவர் மறக்க முடியாத நண்பர்களாகிப் போனார்கள். ஒருவர் நாட்டு விடுதலைக்குப்பின் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய திரு.கே.டி.கோசல்ராம். முற்றொருவர் உப்புத்துறையின் ஆய்வாளராகவும் விளங்கிய லோன்.
…
திரு.கோசல்ராம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைப் பூர்விகமாகக் கொண்டவர். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அழுத்தமான காங்கிரஸ்காரர். துடிப்பான இளைஞர். திருச்செந்தூர், சாத்தான்குளம் உடன்குடி வட்டாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தைப் பரப்புவதில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். திரு.மேகநாதன் என்பவர் இவருக்கு உறுதுணையாய் இருந்தார். காங்;கிரஸ் இயக்கத்துக்காக, சிறிய அளவிலான நன்கொடைகளை என்னிடம் இருந்து பெற்றுச் செல்வார். அவர் வாயிலாக காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிநிலையை அறிந்து கொள்வேன். அண்ணாச்சி என்றே அவர் என்னை அழைப்பார். ஆங்கில ஆட்சியின்போது உப்புக்கு வரிவிதிக்கப்பட்டிருந்தது. இவ்வரி விதிக்கவும், வசூலிக்கவும், அரசாங்க, உப்பளங்களைப் பராமரிக்கவும், ‘உப்பு இலாகா’ என்ற நிர்வாக அமைப்பை ஆங்கிலேயர் உருவாக்கியிருந்தனர். இதன் அலுவலகம் ஒன்று குலசேகரன்பட்டினத்தில் இருந்தது. உப்பு இன்ஸ்பெக்டர் என்ற பதவிப்பெயர் கொண்டவரின் கட்டுப்பாட்டில் இந்த அலுவலகம் செயல்பட்டது. நான் குலசேகரன் பட்டினத்தில் பணியாற்றியபோது வில்பர்டுலோன் என்ற ஆங்கிலேயர் இதன் பொறுப்பதிகாரியாக இருந்தார். சுருக்கமாக, லோன் என்பர் இவரது பதவி ‘ அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் ஆஃப் சால்ட் ’ என்பதாகும். அலுவலக வளாகத்துக்குள்ளேயே இவரது வீடும் இருந்தது.
அலுவலக் பணிமுடிந்த பின்னர் மாலை ஆறுமணியளவில் லோன் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு வருவார். அவர் வருவதைப் பார்த்தவுடனேயே காவலர்கள் இரு நாற்காலிகளை எடுத்து காவல் நிலைய முற்றத்தில் போடுவர். திறந்த வெளியில் கடற்காற்று இதமாக வீசும். காற்று வாங்கியவாறே இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்போம். எங்கள் இருவருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் உண்டு என்பதால் எங்கள் உரையாடலின் மையப்பொருளாக இலக்கியமே பெரும்பாலும் இருக்கும். அவரவர் துறைசார்ந்த சுவையான அனுபவங்கள் இருப்பின் அவ்வப்போது பறிமாறிக் கொள்வோம். ஆரசியல் பேசுவதை எச்சரிக்கை உணர்வுடன் தவிர்த்து விடுவேன். ஒரு வெள்ளைக்காரனிடம் போய் சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து காவல்துறை அதிகாரிபேசிவிடத் கூடாதே!’ என்னைப் போன்றே அவரும் நேர்மையான அதிகாரி என்று பெயர்பெற்றவர்.
வழக்கம்போல், 1942 செப்டம்பர் மாதம் 19ஆம் நாளன்று உரையாடிவிட்டு ஏழுமணியளவில் லோன் வீடு திரும்பினார். இவ்வளவு தெளிவாக நாள் மாதம் தேதியைக் குறிப்பிடக்க காரணம், இந்நாளே எங்களது இறுதிச் சந்திப்பு நாளாக அமைந்து போனதுதான்.
குலசேகரன்பட்டின வாழ்க்கையின் போது இந்திய அரசியலில் விறுவிறுப்பான நிகழ்வுகள் நிகழ்த் தொடங்கின. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்ற முழக்கம் 1942 ஜீலை ஆறாம் நாளான்று காங்கிரஸ் தலைமையால் முன் வைக்கப்பட்டது. இதுவே ஆகஸ்ட் போராட்டம் அல்லது ஆகஸ்ட் புரட்சி எனப்பட்டது. ‘இப்போராட்டம் தொடங்கும் முன்னரே காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். அவரை அடுத்து, நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இல்லாத நிலையில் தொண்டர்களை வழி நடத்துவாரில்லை. இதனால் தொண்டர்கள் காந்திய வழிமுறைக்கு மாறாக வன்முறையில் இறங்கலாயினர். இது குலசேகரன் பட்டினம் இருந்த திருச்செந்தூர் வட்டத்திலும் பரவியது. தேரிக்காடு என்றழைக்கப்படும் இப்பகுதியில் உள்ள உடன்குடி, திசையன்விளை, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், குறும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான கோபத்தை அரசாங்கச் சொத்துகள் மீது காட்டலாயினர். தந்திக்கம்பிகள் அலுக்கப்பட்டன. தபால் நிலையங்கள் தாக்குதலுக்காளாயின. குறும்பூர் ரயில் நிலையத்திற்குத் தீவைக்கப்பட்டது. இதில் முன்நின்ற இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர். இதற்கான ஆயுதங்களைத் திரட்ட, குலசேகரன் பட்டினம் உப்பு இலாக அலுவலகத்தைக் கொள்ளையடிக்க வந்தனர்.
அப்போது, உப்பு இலாகாவிலும் சுங்கத் துறையிலும் ‘ சிப்பாய் ’ என்ற பெயரில், காவலர்கள் உண்டு. இவர்களுக்கும் காவல் துறையைப் போல் துப்பாக்கி வழங்கப்படும். இத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் துப்பாக்கி தேவையாய் இருந்தது.
இத்துறை நிலைபெற்ற பின் இதன் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் இத்துப்பாக்கிகள் இத்துறையின் அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. குலசேகரன் பட்டினம் உப்பு இலாக அலுவலக்த்திலும் பூட்டப்பட்ட அறை ஒன்றில் துப்பாக்கிகள் இருந்தன. இதை அறிந்த இப்பகுதி காங்கிரஸ் இயக்க இளைஞர்கள் இவ் அலுவலகத்தைத் தாக்கி துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இத்திட்டத்தின்படி 1942 செப்டம்பர் 20 ஆம் நாள் அதிகாலை மூன்றுமணி அளவில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து உப்பள அலுவலகம் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கிருந்த சிப்பாய்களைக் கட்டிப்போட்டு விட்டு ஒன்பது துப்பாக்கிகளையும அவற்றுக்கான தோட்டாக்களையும் கைப்பற்றினர். எதிர்ப்புக்காட்டிய இரு சிப்பாய்களுக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
ஆராவாரம் கேட்டு வெளியே வந்த லோன், பாய்னட்டுடன் கூடிய துப்பாக்கியுடன் வந்து சுட்டார். காவல் துறைத் துப்பாக்கியைப்போல் அன்றி முறையாகப் பராமரிக்கப்படாத துப்பாக்கி என்பதால் குண்டுக்குப் பதில் புகை வந்தது. கைப்பற்றிய துப்பாக்கியால் அவரை நோக்கிச் சுட்டனர். ஆனால் அவர்மீது குண்டு பாயவில்லை. துப்பாக்கி பயனற்றுப்போன நிலையில் பாய்னட்டால் தாக்க லோன் முனைந்தார்.
எதிரியைக் கொன்றால்தான் தாம் உயிர்பிழைக்கமுடியும் என்ற நிலைக்கு இரு தரப்பினருமே ஆளானார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தோரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் லோன் இறந்து வீழ்ந்தார் துப்பாக்கிச் சத்தமும் கூக்குரலும் கேட்டவுடன் காவல் நிலையத்திற்குள் வந்தேன். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உப்பு இலாக பக்கம்தான் பிரச்சினை என்று சிலர் வந்து கூறினர். உடனே பெடரோமாக்ஸ் விளக்குகளைப் ஏற்றிக்கொண்டு, காவல்நிலையத்தில் படுத்திருந்த குற்றபரம்பரையினர் சிலரையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.
ஆங்கு லோன் இரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட காயங்கள். முதல்நாள் இரவு ஏழுமணியளவில் உரையாடிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்ற லோன் மறுநாள் காலை நான்கு மணி அளவில் பிணமாகக் காட்சியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யு_ூவைகுண்டத்தில் இருந்த மேலதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பிவிட்டு லோனின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தேன். குலசேகரன் பட்டினம் சர்ச்சுக்கு எதிரில் கல்லறைத் தோட்டம் ஒன்றுள்ளது. பாரிகம் பெனியார் சீனி ஆலை ஒன்றை அங்குநடத்தி வந்த போது அதில் அய்ரோப்பியர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களில் சிலர் இயற்கையாக இறந்தபோது அக்கல்லறைத் தோட்டத்தில் அவர்களுக்கென்று தனியான இடத்தை அதன் வடபகுதியில் ஒதுக்கியிருந்தனர். வெள்ளைக்காரனது இனவெறியே இதற்குக் காரணம். வெள்ளையர் என்ற முறையில் இப்பகுதியில் லோனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. மிகுந்த துக்க உணர்வுடன் புதைகுழியில் நானும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டு விட்டு வீடு திரும்பினேன்.

என் காவல்துறை அனுபவங்கள்: 2

என் காவல்துறை அனுபவங்கள்: 3

என் காவல்துறை அனுபவங்கள்: 4

தொடரும் .....
No comments:
Post a Comment