Saturday, May 12, 2018

DSP Family: Aruna, Kasturi

Surya:
பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியன்  ... பேராசிரியர் ஆ சிவம்  மற்றும் புலவர் சார் என்று இலக்கிய வட்டத்தில் மிகவும் அறியப்பட்டவர் . படித்தது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்  புலவர் பட்டயம் . புலமை யோ தமிழ் . வரலாறு மற்றும் நாட்டுப்புறவியல் ( Folklore ) துறைகள் . இந்தியாவில் நாட்டுப்புறவியல் துறையில் கவனிக்க கூடிய முக்கிய நபர் . கம்யூனிசவாதி . கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர். ஆனால் அதனை தன்னைச் சார்ந்தவர்களிடம் ஒரு போதும் புகுத்தியதில்லை . மிகச் சிறந்த பகுத்தறிவாளர். ஓராரிரம் P.hd களுக்கு சமம். சிறந்த எழுத்தாளர். அனுபவப் பூர்வமாக அலைந்து திரிந்து தானே செய்திகளை சேகரித்து தொகுத்து வெளியுடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.. உண்ண மறந்தாலும் மறப்பர்களே தவிர புத்தங்கள் வாங்க மறப்பதில்லை. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தவர்..
எனக்கு வ.உ.சி கல்லூரியில் முதல் இரண்டு வருடம் தமிழ் ஆசிரியர் . மாமாவின் வகுப்பை யாருமே புறக்கணிக்காதற்கு இரண்டு காரணங்கள் .. 1. ஆழ்வாரின் அப்பா ( ஆழ்வாரும் நானும் வகுப்புத் தோழர்கள் . பென்சு மேட் . அவன் இந்தி வகுப்பிற்கு போய் விடுவான் ) 2. நேரம் போவ தே தெரியாமல் எளிமையnன முறையில் லகுப்பு எடுப்பது . படிக்கத் தேவையில்லை . மாமா சொன்னதை வைத்தே எழுதி பாஸ் ஆகி விடுவோம். . விபத்து நடந்திராவிடில் இன்னும் நிறைய படைப்புகள் வெளி வந்திருக்கும். 2017 சனவரி திங்களில் பனையைப் ( Palm tree) பற்றிய புத்திகம் வெளியாகிறது. ( ஆழ்வார் /ராம் ... இலவச பதிப்பு அனுப்பவும். ). சாதி மதம் எழை பணக்காரன் பாகுபாடு பார்க்காதவர். எம்மதமும் சம்மதம். ........

அருணா அத்தை .... " ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒர் பெண் இருப்பாள். " மாமாவின் இத்தகைய உயர் நிலைக்கு அத்தையே காரணம் . குடும்ப நிர்வாகம் முழுமையாக அத்தையே. கடைக்கு போவது EB பில் கட்டுவது பசங்களுக்காக School ற்கு போவது . Rank card ல் அத்தை கையெழுத்து தான் இருக்கும். பெரியம்மாவிற்கு அடுத்த அன்னப் பூரணி . சொந்தக் காரர்கள் மட்டுமல்லாமல் கட்சி தோழர்கள், மாமாவின் மாணவர்கள் மற்றும் இலக்கிய வட்டாரங்கள் அத்தை கையால் சாப்பிடாதவர்கள் யாருமே இல்லை.. ஏன் பல முறை அத்தை சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்தே ஒல்லிக் குச்சி உடம்புக் காரி ஆகி விட்டார்கள். நான் எனது 3 வருட கல்லூரி படிப்பு முழுவதும் மற்றும் அதற்கு பின்பும் மதிய உணவு அருணா அத்தை கையால் தான். அருணா அத்தை தான் எனக்கு டீ ( Tea) அறிமுகம் செய்தவர்கள் . அவர்கள் டீ க்கு நான் மற்றும் மணி சித்தப்பா அடிமை . 24 hrs Aruna Tea Stall........
============================================================
ramalingam s: வீரபாகு பெரியப்பா & பெரியம்மா....
கீழூர் Christopher compound வீடு தான் முதலில் சென்றது. முதலில் தொலைபேசி பார்த்தது / பேசியது அங்குதான். நான் கொஞ்சம் சேட்டை பண்ணாமல் இருந்த்து  பெரியம்மா வீடுதான் என்று நினைக்கிறேன். ராம் நான் ஒன்றாக விளையாடுவோம். பெரியப்பா கொஞ்சம் கண்டிப்பானவர்கள். வீடு கட்டினால் எப்படி கட்ட வேண்டும் என்பதை பெரியப்பாவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  முதலில் foundation போட்டு சிறிது காலத்திற்கு பின் கட்ட ஆரம்பித்து முடியும் வரை தினமும் வந்து வந்து, பார்த்து பார்த்து கட்டினார்கள். நான் வீடு கட்டும்போது அவர்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.
சங்கரி அக்காவை குட்டிப் பிள்ளை என்று கூப்பிட்டு வம்பிழுப்பேன். பட்டாச்சியின் "எல...ராமு...."  விசாரிப்பை மறக்க முடியாது. தெர்மல்  நகரில் ராம் மற்றும் எல்லா பசங்களும் விளையாடி இருக்கிறோம். பெரியம்மா பாம்பே போகும்போதுதான் முதலில் இரயில் நிலையம்/ இரயில் பார்த்தது.
==========================================================
kaveri:Kasturi athai mama and kasturi athai: Mama bayangara soft spoken. ரொம்ப அருமை யாக வி சாரிப்பாங்க. Recently too checked with MKP about his health issues and asked him not to get tensed and to be cool.மாமா வுக்கு கோபமே வராதோ என்று நினைக்கிறேன்.
Athai was a annapoorani for sambath Anna and Durainna when they were bachelors in Chennai.Sema knowledge about human anatomy. Used to give lots of info when somebody has health issues.Amazed by her interest. Super memory power. Appavudan kottam aditha ArumaI thangai.

========================================
வீரபாகு   மாமா  மிகவும்  அமைதி  மிக  பாசமானவர்கள்  பொறியாளர் என்ற  கர்வம்  இல்லாதவர்கள்  தன்  பெற்றோரை  கஸ்தூரி  அத்தை  துணையுடன் நன்றாக  கவனித்துக்  கொண்டார்கள்  கஸ்தூரி  அத்தை  சூப்பர்  கலகல டைப்  முடி வெகு  அழகு  புடவை  அழகாக  தேர்வு  செய்வாகள்  நேர்த்தியாக கட்டுவார்கள்  ஒரு சம்பவம்  அவர்கள் மாமியார்  கறிவேப்பிலை  தைலம்  கடைசி  வரை  உரலில்  இடித்து  தயார்  செய்து  கொடுத்தார்கள்  ஆச்சிக்கு  கடைசி  வரை  முடி  நரைக்கவில்லை   குஞ்சு  குட்டி  ராம்  மூவரையும்  அருமையாக  வளர்த்தார்கள்  ராம் என்னிடம்  நன்றாகப்  பேசுவான்  வீரபாகு  மாமா  பாலாஜியின்  திருமணத்திற்கு   குடும்பத்தோடு  வந்து  ஆசீர்வதித்து  எங்கள்  இருவருக்கும்  மன நிறைவை  தந்தது  நன்றி  காமாட்சி  ராமூர்த்தி
=================================================================
pandian: வீரபாகு பெரியப்பா , பெயருக்கு ஏற்ப வீரனுக்கு தேவையான பொறுமையும்,பாகு போன்ற இனிமையான பெரியப்பா...
என் அப்பாவிற்கு திருமணத்திற்கு முன் பரிச்சயமான பக்கத்து வீட்டு பட்டு அத்தையின் தலைமகன்..
அம்மாவின் இயற்பெயர் பட்டு என்பதற்கு ஏற்ப பட்டு போன்ற மென்மையானவர்கள்.
பலதுறையில் நுண்ணறிவு கொண்டவர்கள்...
பேச்சுகிடையில் ஆங்கிலத்தில் சரளமாக தெளிவாக பேசுவார்கள்...
எதையும் ஆழ்ந்து,ஆராய்ந்து,details to the core ஆக பேசுவார்கள்,கேட்டும் தெரிந்து கொள்வார்கள்.
Last week kuda பெரியம்மா சொல்லி கொண்டு இருந்தார்கள்,இப்போது கூட நிப்பூஜிதா வின் mathematics solve பண்ணுவார்களாம் ...அவ்வளவு ஆர்வம் எல்லாவற்றிலும் ...பேத்திகளுக்கு சொல்லி கொடுக்கும் ஓரே தாத்தா இவர்களா மட்டும்தான் இருக்க முடியும்.
படிப்பிற்கும் ,நம் புத்திகூர்மையை தீட்டி வைப்பத்திற்கும் வயது ஓர் தடையல்ல என்பதற்கு பெரியப்பா ஓர் எடுத்துகாட்டு...
கஸ்தூரி என அழைப்பதிலும் என்னமா என கூப்பிடுவதிலும் பெரியப்பா பெரியம்மாவின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு.....
பெரியம்மா இன்றும் கூட துள்ளி குதித்தொடும் சுட்டி  பொண்ணு...
குடும்பத்தின் finance minister,budget எப்படி போட்டு வாழ வேண்டுமென்பதை இவர்கள் seminar எடுத்தால் கட்டாயம் எல்லோரும் attend panna தயங்காதீர்கள்.
அம்மா பல முறை கூறி இருக்கிறாள்,financial planner....
நிப்பூஜிதாவுடன் சென்னையை சுற்றி வலம் வரும்,வயது தெரியாத பள்ளிமாணவி
மனதளவில் இளமை,ஆச்சியை பற்றி பேச வேண்டும் என்று சொன்னவுடன் எந்தவித தயக்கமின்றி spot acceptance கொடுத்தது மட்டுமின்றி,அழகாக கோர்வையாக முதலில் பேசவும் முன் வந்தார்கள்.
புத்தக விரும்பி, அம்மாவிடம் புத்தக பதிவுகளை உரையாடும் போது அவர்கள் முகமே அந்த புத்தக அனுபவத்தை பற்றி பேசும்.
விசேஷ வீடுகளில் அடிக்கும் லூட்டிகளும் ஏண்டி போட்டு அடிக்கும் கதைகளும்,குட்டியம்மா,குஞ்சம்மா சொல்லும் வார்த்தைகளும்,பெரியம்மாவின் கண்ணை மூடி கலகலவென சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இப்போது நினைத்தாலும் அந்த சிரிப்பு flash ஆகிறது....முத்து லெட்சுமி என்ற இயற்பெயருக்கு ஏற்ப சிரிப்பை முத்தாக உதிர்த்து ஆச்சிக்கு அடுத்து லெட்சுமிகடாஷமாக இருக்கும் பெரியம்மா....
திலி சிந்துபூந்துறை செல்விநகரில் பெரியப்பா தம்பி வீட்டில் சங்கரி அக்காவை பெண் பார்க்க ஏற்பாடு செய்யபட்டது.அது இன்றும் என் நினைவில் உள்ளது.
என் எழுத்திற்கு எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும் ஜோடிகள்.
சுருங்க சொல்லுவதெனில் சுறுசுறுப்பான, அறிவாளியான,Energetic couple....
====================================================
Neppo: [12:33, 12/3/2016] +91 98409 69581: Spice and sugar are important for life. But when they are combined they create a magical blend which is tantalizing. Aachi and Thatha are like that. When I was small I used to go to Aachi's home every holiday. But I always had a fear that Thatha would tell me to solve some maths problem( I hated maths at that time). But lately my aversion towards the subject changed and its only because of Thatha. Thatha is an erudite person who has profound knowledge in many things. His approach towards difficult situations and the way he solved it has always admired me.                    
[12:33, 12/3/2016] +91 98409 69581: When Aachi was a kid she had dreamt of becoming a doctor. But situations were not favourable to her. ( Alas! India has missed a great doctor). But she has never stopped herself from learning about medicinal stuffs and she passes on her knowledge to everyone. Aachi also has the habit of reading lots of books unlike Thatha who is "The Hindu" addict. She started reading vikatan at the age of 5 and till today never misses to read it. Without Aachi and Thatha I would have been a lost lamb in the hills. I am blessed to have them as my grandparents.⁠⁠⁠⁠
====================
Sanjana: [12:34, 12/3/2016] +91 94452 16775: This is Sanjana,grand daughter of Veera thatha. Kasturi achi is my favorite achi. She is always laughing (for mokkai comedies also). She tells me stories, listens to my school stories,plays with me and entertains a lot. I like to travel, to spend time with achi. I like achi's cooking, especially prayana thuvaiyal.
 Veera thatha asks me many questions, he is very good in maths. In future I want to be good in maths like thatha. Whenever he comes to our house he appreciates my studies, singing and art work.  He tells history about all the places we visit, and asks me to write about my trip(which I don't do). I and my sister prepare hand made greetings for their wedding day. I always miss when they visit my house and leave(feel like crying). I love my achi thatha very much.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: Spice and sugar are important for life. But when they are combined they create a magical blend which is tantalizing. Aachi and Thatha are like that. When I was small I used to go to Aachi's home every holiday. But I always had a fear that Thatha would tell me to solve some maths problem( I hated maths at that time). But lately my aversion towards the subject changed and its only because of Thatha. Thatha is an erudite person who has profound knowledge in many things. His approach towards difficult situations and the way he solved it has always admired me.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: He is my kick start and role model. Aachi is more like a best friend to me. She is the strongest women I have ever met. When Aachi went to Bombay, the 3 kids had to be enrolled in an English medium school. But the problem was all of them had studied only in a Tamil medium. Believe me or not , Aachi single handedly taught them English, Hindi and a little maths for 3 months and got their admission. Talking about her culinary skills, she is a pro in it. Basically I am a foodie and I used to torture her to cook something new. But each time I ask her she used to surprise me with a new dish which is just awesome.  Kaimuruku is her special dish and whosoever eats it will become an adimai to her samayal.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: When Aachi was a kid she had dreamt of becoming a doctor. But situations were not favourable to her. ( Alas! India has missed a great doctor). But she has never stopped herself from learning about medicinal stuffs and she passes on her knowledge to everyone. Aachi also has the habit of reading lots of books unlike Thatha who is "The Hindu" addict. She started reading vikatan at the age of 5 and till today never misses to read it. Without Aachi and Thatha I would have been a lost lamb in the hills. I am blessed to have them as my grandparents.                    
======================================

[22:05, 12/3/2016] +91 94444 52163: The documentary serial sankarammal 94. In dspfamily                    
[22:05, 12/3/2016] +91 94444 52163: Family channel is well going with good trp rating. Congrats. The corner mansion in Parthasarathy Naidu street which the introductory video exhibits is the gateway to lot of family members. Radha athan is fortunate enough to stay in this house of serene and divine environment in his school days and developed good habits and pious mind. Here I would like to regard a few words about IG Pillai thatha. An admiring personality, a 75 years youth with commanding voice. No discrimination against anybody by status is his distinct feature. Arumugam Annatchi is a man of few words. He will enjoy playing with kids. He is a rare visitor to anybody's house. His visit to our house at Bombay during his official visit to the city is memorable. Mama is a towering personality well suited to police force. I was a first new entrant to this police family wherein all members used to stand and listen carefully to catch a few words which Mama may utter. It was a strange thing for me. But things were different inside the house. The regimentation centered to outside people was a heaven for all the family members. Hari mapillai is a replica of mama not only in stature but also in authority. He has mellowed down over the years like all of us( seniors). He is a regular visitor to our house. Tempting opportunity to grab material wealth is a real testing ground to assess one's integrity. Police department is one such organization. Sethu annachi passed the test with distinction and yearned a good reputation with IPS officers. I used to wonder how he wielded influence in police circle even after 20 years of retirement. Our first feast after our marriage was in Athur annachi's house. I was expecting a formal invitation. He came all the way from athur to dcw quarters and invited me just for the sake of kasthuri and mama . Now it appears foolish on my part to expect such things. Cashier is the crucial cutting edge between management and staff. He was popular with both of them because of his efficiency and integrity. That is why Jain family gracefully accomodated Kannan in the organization. Kannan also gradually gained and sustained the good image of his father . To know a father you observe the children.  Successful Alwar and ram are the true testimony to this statement. My school mate, social thinker and Tamil professor Sivam used to have discussion with learned people in political/ literary circle at his house. These two children had the opportunity to interact with them , a fertile ground to grow ones mental strength to meet challenges in life. That way my friend by his action subtly molded them well.  -  S. Veerabahu

======================================================
Ram v: I probably spent more time at Aruna chithi's house during school holidays. It was like a second home to me. Needless to say, Chithi took good care of me. Her tea, porikadalai urundai and kaaramilla idli podi are my favourites. Chithappa avargal nanbarguladan discuss pannuvadhai Sila neram ottu kettadhundu. Never understood the conversations. It amazes me to see Alwar chase his dream with resoluteness. During the initial period of his business venture, he used to visit Chennai often to meet clients and source materials and I have never seen him losing energy or confidence when things don't go as planned. Subbu somehow survived and managed the warring boys and helped Chithi. Ram is an example that every kid has a hidden talent. He hated school and regular studies but later proved his skills in hardware after attending a short course in computer maintenance.
====================================================================
appa: I fully endorse the views of Nepoo and Sanjana about their THATHA and my mappilai Mr Veerabagu.As they said he is a very erudite person and has profound knowledge in many different things.During discussions he will try to collect more informations by questioning us and will not show his reactions even if the feedback is absurd.Simply He will nod his head. He is very soft spoken person He was a Gr 1 officer in the Central Government which involves administrative work also in addition to Technical work.He has successfully completed his tenure with good name.Above all he has successfully completed all his family responsibilities with  well planning.Glad to see that good grandchildren also are good in all things.

==================================
appa: The views expressed by Suri about our mappilai Prof Siva subramaniam who is known as Pulavar in the colleges and educated circle.We were there at Chidambanagar when he was in College quarters So l Fully know the name he had among students and management.Some may be excellent speaker and good writer.But he is versed in writing as well as speaking.He will collect more informations by reading various books for writing.You may be happy to hear that his books are in U.S.When we were in New York Sambath showed his book in the local library.Very unassuming knowledgeable person.lastly We are Thankful to him in one matter When father was upset and sitting lonely after  the incident to us in SNKL he used to come  to our house daily after college hours and will be talking to him  to divert his attention. He is the one of the person who made my father to take this good decision boldly though objections were there Also he was bold enough to withstand the situation when he met with an accident It is
God's Grace.HE never sees that whether the individual is thinking or not.HE weighs only by the individuals contribution to the humanity
====================================================
KAMALAKANNAN: வீரபாகு அண்ணாச்சிஅவர்கள்சத்தமே இல்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள்.
நிதானம் அடக்கம் அன்பு நாகரிகம் ஒழுக்கம் நிறைந்தவர்கள். மீராவுக்காக என்னை  தென்காசியில் விசாரித்துசான்று கொடுத்தவர்கள்.?
எந்த ஒரு காரியமும்அந்த அந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதற்கு
திட்டம் வகுத்து
. செயல்ஆற்றக் கூடியவர்.கஸ்தூரி மதினி" ஆங்கிலம் தமிழ் ஹிந்தி பின்னி பிடல் எடுப்பவர். அத்தைக்கு மிக நெருக்கமான முப்பெரும் தேவிகளில் ஒருவர். சுரு சுருப்பானவர் ராம் அப்பாவின் நகல்.சஙகிரி சுப்பு நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.🙏🏾
==========================================
PANIDAN: இறைவன் மீது நம்பிக்கை இல்லாத உங்களுக்கு அப்பா மற்றும் மகனின் கடவுள் பெயரை வைத்துள்ளார்கள் சிவசுப்பிரமணியன் பெரியப்பா அவர்களே.
நமது முத்தமிழ் அறிஞர்,எப்போதும் புத்தகம் கையுமாக,அந்த ஜோரான  பையுமாக உங்களை ரசித்துள்ளேன்.
அது மட்டுமா கண்ணாடியில் தொங்கும் கயிறு உங்களை இன்னும் சிறப்பாக காட்டும், பேராசிரியருக்கு உண்டான அடையாளம்.
நம் ஊர் விருது முதல் அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் விருது வரை பல விருதுகள் உங்களது படைப்பிற்கு அங்கீகாரம்...
சமூக ஆர்வலராக உங்களது சிந்தனைகளை பல இடங்களில் பதித்துள்ளீர்கள்...
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய பெயர் காரணத்தை உங்கள் புத்தகம் மூலம் அறிந்தேன் ..
பிரையண்ட் நகர வீட்டில் மரக்கட்டையால் தடுப்பு சுவரை கொண்ட நூலகம் இடம்பெயர்ந்து P&T காலனி பாரதி இல்லத்தில் மாடியில் விரிவடைந்து இன்னமும் விரிவடைகிறது நம் குடும்பத் தோப்பு விரிவடைவதைப்போல்...பெரிய நூலகப் பொக்கிஷத்தை வைத்துள்ளீர்கள்.
எனக்கு வட நாட்டு உணவகத்தை முதலில் அறிமுகபடுத்தியவர்கள் பெரியப்பாதான்.
திலி ரெயில்வே வீதியில் இருக்கும் ராஜஸ்தான் உணவகத்திற்கு என்னை அவர்கள் நண்பர்களுடன் கூட்டி சென்றார்கள்.சமூகத்தை பற்றி என்ன உரையாடினார்கள் கேட்காதீங்க....என் எண்ணம் எல்லாம் அந்த சப்பாத்தி ஊறுகாய்,சப்ஜி,மாங்காய் மீதுதான் இருந்தது என்ன பேசினார்கள் தெரியாது....
அதற்கு பின் பெங்களூர் ,சென்னையில் வடநாட்டு உணவகத்தில் சாப்பிடும் போதும், பெரியப்பாவை நினைத்துகொள்வேன்...
தன்னுடைய எழுத்துக்கு வேகத்தடை போட வந்த அந்த பேருந்து விபத்தை தன் மனதைரியத்தால் தகர்த்தெறிந்து இன்றும் தமிழுக்கு தொண்டு ஆற்றும் உங்களது அயராத உழைப்பு எல்லா தலைமுறைக்கும் ஓர் உத்வேகம்.....உங்கள் தமிழ் வாழ்வாங்கு வாழ்க! தமிழ் முழக்கம் எட்டுதிசையும் தொடர்ந்து ஒலிக்கட்டும்!   பரணி போற்றும் தமிழ் தொண்டு என்றும் தொடரட்டும்!
அருணா பெரியம்மா என்றாலே அந்த கொடியைப் போன்று ஓல்லியான அந்த உடல்தான் எல்லோருக்கும் நினைவு வரும்.
முதலில் எவ்வளவு குண்டாக இருத்துள்ளீர்கள்...green tea குடித்து மெலிபவர்களை பார்த்துள்ளேன் ...ஆனால் சூரி அத்தான் சொன்னது போல் aruna tea stall நடத்தி மெலிந்தீர்களா! மாமியாரை கவனித்த விதமும் அது மட்டுமா சின்ன மாமியாரையும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பொறுமையாக,மனம் கோணாமல் கவனித்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துகாட்டாக விளங்கி உள்ளீர்கள் ...மாமியாரிடம் இருக்க வேண்டாம் என எண்ணும் இப்பொழுது உள்ள பெண்கள் உங்களிடம்  கண்டிப்பாக  பயிற்சி எடுக்கத் தான் வேண்டும்.....
ஒரு முறை சின்ன ஆச்சி அதாவது அந்த சின்ன மாமியார் வெளியே தானாக தனியாக போனதையும் அதை தொடர்ந்து அண்ணன்மார்கள் தேடி அலைந்து திரிந்ததையும் பகிர்ந்தது இன்னும் நினைவு இருக்கிறது.அந்த ஆச்சியின் genes மூலமாகவோ அவர்களுடன் விடுமுறை நாட்களில் இருந்ததால் என்னவோ சித்தார்த்திற்கு வரைகலை வந்ததோ !
என் சாந்தா பெரியம்மா அம்மாவை பார்த்து உனக்கு உதவ நிறைய அக்காமார்கள் இருக்கிறார்கள் என அடிக்கடி சொல்லுவார்கள். அதை பறைசாற்றுவதைப் போல நான் அயல்நாட்டில் இருந்தபோது,நீங்கள் அம்மாவை நாகர்கோவிலில் அவளது கால் அறுவைசிகிச்சையின் போது நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள்.நீங்கள் உங்கள் தங்கைக்காக செய்து இருந்தாலும், எனக்கு அது பெரிது என்றும் மறக்க முடியாதது,உங்களை அனுமதித்த பெரியப்பாவிற்கும், வீட்டை நிர்வகித்துக் கொண்ட அருணா மதினிக்கும் நன்றிகள்.
வேறென்ன அந்த பிராயண்ட் நகர் வீடும் , அந்த அடுப்பங்கரையும், இருட்டு store room ,ஹாலில் ஆச்சி, தாத்தாவின் கலர் புகைப்படமும் என்றும் நினைவுகள்.ஆ! கிணத்தடியை மறத்துட்டேனே, நன்றாக கிணற்றை வாரி இறைத்து குளித்துள்ளேன்...அந்த rose color lifebuoy soap வாசம் இன்னும் மணமாக இருக்கிறது .
என்னுடைய விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழித்ததில் அருணா பெரியம்மா வீடும் ஒன்று...
தன் அன்றாட ஒயாத வேளைகளில் நடுவில் சில காலம் அந்த பெரிய வளர்ந்த johnny (பெயர் சரிதானா? )நாய்க்கு சாப்பாட வேற போடுவீர்கள்... எனக்கு அதை பார்த்தால் கொஞ்சம் பயம்.உன் அண்ணன் எங்க கேட்கிறான் , அதுக்கு நேரம் ஒதுக்கி அதுக்கு நான் சாப்பாடு போட்டுனு உங்களது படப்படனான குரலில் விவரிக்கிறது ஓர் தனி அழகுதான்...
கட்டிலிலிருந்து நீங்கள் கீழே விழுந்தது எனக்கு மிகவும் வருத்தம் தான்...
பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவருக்கு வாசுகி போல் எங்கள் தமிழ் ஆர்வலரான சிவசுப்பிரமணியன் பெரியப்பாவிற்கு எங்கள் அருணா பெரியம்மா...
கண்டிப்பாக கிணற்று கயிற்றை  ஓர் நாள்
விட்டு இருப்பார்கள் ...                    
=======================================================
RAMADURAI: நான் சென்னை வந்தவுடன் அடைக்கலம் கொடுத்தவர்கள் ....
சம்பத் அண்ணாவும், நானும் ஞாயிறு தோறும் அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவோம் ....ஹோட்டல்/ மெஸ் இல் சாப்பிட்டு செத்து போன நாக்கிற்கு உயிர் கொடுத்தவர்கள் ...
ஞாயிறு காலை அத்தை வீடு வந்து dress wash பண்ணி , மதிய உணவு சாப்பிட்டு , சிறிது நேரம் DD பார்த்துவிட்டு , ஒரு குட்டி தூக்கம் போடுவோம்.....
அது தான் "சொர்க்கம்"|
ஒரு ஞாயிறு வரவில்லை என்றாலும் phone பண்ணி விடுவார்கள் ...

மாமா ஒரு encyclopedia ...
மாமாவுடன் எந்த topic என்றாலும் பேசலாம் ...He is a good listener ....கோபத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் ...

கஸ்தூரி வீட்டு ஆச்சியும் , தாத்தாவும் பாசத்திற்கு உரியவர்கள் ....ஆச்சி எப்போதும் எங்கள் கைகளை பிடித்து கொண்டு தான் பேசுவார்கள் ...அவ்ளோ அன்பு ..

==================================
RAMALINGAM: பட்டாச்சியும் எங்கள் ஆச்சியும் திலி, சிந்துபூந்துறை சிறு வயது தோழிகள். இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, "யக்கா...யக்கா..." என்று பேசுவது எனக்கு மிகவும் வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருக்கும்.😀😀😀.  அப்பாவும், பெரியப்பாவும் பள்ளி தோழர்கள்.

====================================
SIDDHARTH: வணக்கம் 🙏

நான் சித்தார்த், சிவசுப்ரமணியன் - அருணா தம்பதியினரின் பேரன். வாழ்க்கைக்கு உற்றதுணையாகவும், உறுதுணையாகவும் இருப்பது கல்வி. அக்கல்வியின் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது என் தாத்தாதான். என் தாத்தா பல வருடங்களுக்கு முன் வ.உ.சி. கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவர் புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு புத்தகத்தை இழந்தால் தன் சுவாசத்தில் ஒரு பங்கை இழந்த்தாக எண்ணுவார். நான் கட்டுரை எழுத, பேச நன்றா உதவி செய்வார்கள். ஒருமுறை காமராசரை  பற்றி மேடையில் பேச வாய்ப்பு கிட்டியது. என் தாத்தா எழுதிக் கொடுத்த கட்டுரையால் தான் அந்த போட்டியில் பங்கேற்கவே முடிந்த்து. நான் 6வது வகுப்பு படிக்கும் பொழுது என் தமிழ் ஆசிரியை தரங்கம்பாடி ஊரை பற்றி பாடம் எடுத்தார். நான் அவரிடம் என் தாத்தா அவ்வூரைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்கள் என்று கூறிணேன். அவர்கள் அப் புத்தகத்தைக் கேட்க, நானும் தாத்தாவிடம் வாங்கிக் கொடுத்தேன். அவர்களை அதனைப் படித்து, அவர்களது தந்தையிடம் (ஒய்வு பெற்ற தாசில்தார், கோவை) கூறியிருக்கிறார். அவர் என் ஆசிரியையிடம் " அவர் தமிழ் நாட்டில் பெரிய எழுத்தாளர் ஆயிற்றே. அவர் பேரனுக்கு நீ பாடம் எடுக்கிறாயா? அவ்வளவு பெரிய மனிதரின் பேரனுக்கு பாடம் நடத்த நீ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்", என்று கூறியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் தாத்தாவை பார்த்ததே கிடையாது. இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் கூட ஆசிரியர்களை கேலி செய்து பட்டப் பெயர் வைக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட காலத்திலும் மாணவர் மனதில் கொடி நாட்டிய பெருமை என் தாத்தாவையே சேரும். முகநாலில் தாத்தாவை அவரது நண்பர்கள் அவரை இரண்டாவது உ.வே.சா. என்பர். இதைவிட பெரிய பெருமை வேறென்ன வேண்டும்?
என் ஆச்சி. ஆச்சி என்றாலே நினைவிற்கு வருவது ஒன்றுதான். அதுதான் தின்பண்டம்😜😀. அவர் என் வீட்டிற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதேனும் தின்பண்டம் செய்து தருவார். அவ்வாறு செய்யவில்லை என்றால் " அய்யோ நா உனக்கு ஒன்னும்  செய்யலியே.." என்று என்னிடம் புலம்புவார். ஆனால் சிறிது நாட்கள் கழித்து செய்து கொடுப்பார். இப்போது சொல்லுங்கள் நான் கொடுத்து வைத்தவன் தானே? என் தாத்தாவிற்கு விபத்து நேர்ந்த போது மனம் தளராது, தைரியமாக இருந்த ஒரே நபர் ஆச்சி மட்டும்தான். ஒரு நாளைக்கு 5 முறையாது நானும் ஆச்சியும் சண்டை போடவில்லை எனில் அந்த 'நாடா' புயலே வந்து மதுரையை சூறையாடிவிடும். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும், என் ஆச்சி ஆச்சி தான் தாத்தா தாத்தாதான்.
==============================
KAMALAKANNAN: சிவசுப்பிரமணியன்
அண்ணாச்சிபற்றி
மேதை நடமமாடும்பல்கலை
கழகம் அறிவுகளஞ்சியம்.
ஏகப்படட விருதுகளுக்கு சொந்தமானவர் ராம் வீராவுக்கு ஆலோசகர் .குருவும் கூட.பெரிய அத்தான்தெர்மல் சென்றவுடன் அந்த வீட்டீன் அடையளம்
(விருந்தோம்பல்)மாறாமல்இருந்தவர்கள்..
அருணா மதினி  எத்தனயோ பேருக்கு ஆஸ்பத்திரி யில் இருக்கும்போதுசளைக்காமல் சாப்பபாடு போட்ட அண்ணம்மிட்டகை.
அவர்கள் வீட்டீற்கு சென்று திரூம் போதலாலாம் பைக்குள் பண்டங்களை நமக்கே தெரியாமல்  வைத்திருப்பார்கள்  ..ஆழ்வார் உழைப்பால் உயர்ந்தவன்.ராம் தனக்கென்று  ஓர் பாதையை அமைத்து  வளர்ந்து கொண்டிருப்பவன்👍🙏🏾வாழ்க வளமுடன்.
=============================================

No comments:

Post a Comment