இன்று: திரு சிதம்பரநாதன், கல்யாணி அவர்கள் குடும்பம்
திரு. அருணாச்சலம் , பார்வதி அவர்கள் குடும்பம்
=====================================================================
Alwar:
Kamakshi R: ராதா சித்தப்பாவும் கல்யாணி சித்தியும் நம் பெரீீரீரீய குடும்பத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷங்கள் அவர்கள் பக்தியும் பொறுமையும் ஆச்சரியமானவை அவர்கள் புதல்விகளும் புதல்வனும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சுறுசுறுப்பான தேனீக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ரா காமாட்சி பாலாஜி
அருணாசலம் மாமாவை நான் பார்த்ததில்லை பார்வதி அத்தையுடனான உறவு அருமையானது அத்தையைப் பார்க்கவரும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வருவார்கள் கதைப் புத்தகங்கள் படிப்தில் அதிக ஆர்வம் பேசினால் நேரம் போவது தெரியாது தனியாளாக நன்று தன் குடும்பத்தை கட்டி காத்தவர்கள் கண்ணன் அமைதி முருகன் கலகலப்பானவன் பாசமான குடும்பம் காமாட்சி ராமமூர்த்தி
======================================================================
Ram: நான் கல்யாணி அத்தையிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும். விடுமுறை நாட்கள் ராதா மாமா வீட்டில் தான். நான்,சூரி, முருகன் என எல்லாரும் போட்ட ஆட்டங்கள்....
கேம்ப் 1 வீடு மறக்கவே முடியாது. அத்தையின் கவனிப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. திறந்த வெளி அரங்கில் பார்த்த திரைப்படங்கள், கனகாவுடன் விளையாட்டு, என் ஆங்கில ஆசிரியை சுமதி அக்கா, சம்பத் அண்ணாவுக்கு உதவி செய்து சங்கரி, சுமதி அக்காவிடம் வாங்கிக் கட்டியது, எப்போதும் அத்தை பின்னாடியே சுற்றியது......சொல்லிக்கொண்டே போகலாம்.....

Kanaga: about video: Super , retd chief Engineer , தெர்மல் நகர் கோவில் தர்மகர்த்தா எப்பொழுதும் கம்பீரமாக (சில சமயம் கோபமாகவும்) இருக்கும, நாங்களனைவரும் பெரிதும் மதிக்கும்் 77 வயது சிதம்பரநாதன் ஒரு குழந்தையைப் போல் தன் அம்மாவிடம் அதிக உரிமை கொண்டாடியது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது
அன்னபூரணி கல்யாணி மிகவும் அரிதான பிறவி.
எல்லோரையும் தன் குழந்தைகளாக சமமாக பாவிப்பது அவ்வளவு எளிதல்ல.
Parvathy mathiri books vaasikka yaaralum mudiyaathu, evvelavu koottammaha irunthaalum avanga Kaila book irukkumnu, romba fast. Takes ups and downs easily, very adjustable, naanum athaiyum 2 years back sari vaanga ponom, 5 min la select pannittanga
=====================================================================
Nandini Pandian: aachi kezhamai function la kuda elarum saptutu ponga maavu iruku nu perima said.. adhuku durai n.a... maavu dha inga epome irukume nu said... such a sweet lady perima .. I always admire her manjal mugam poosiya mugam
kovam .. ok... but aachi oda comic sense Konjam peripa kita irukunu I feel... he used to talk in tat way to Varun Appa 😀... Ana peripa start nu sonadhum total family um kelambidum.. including enga kada kutti kanagaka.. I saw tat even in today's function... the most admirable couple peripa and perima ... I can very well say.. we all always love u dear peripa and Perima 😃
ull ondru veithu puram pesa theriadha parvathy athai .. achu asal aachi sayal . yes awesome book reader.. I noted tat in mama's 16th day function
adikadi watsap la pesnadhunala Sampath anna usha mathini kita first time eh jolly Ana free Ana pechu .. azhagana sankari ka sooper Ana Ravi a than and 3 lovable princes... santhamana santhana Akka ku handsome Ana Shan athan. pasamana Siva... bavyamana enga nands ... en support always irukum enga kutty kangaka.. enaku kuda mariyadhai tharum much talented Ana VMS a than... solave venam. varungala director charan sundar .. Ipove cricket news la kalakum aadi boy. .. kalakal family😀

Sankari Ravi: இந்த மாதிரி அப்பா அம்மா கிடைக்க நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். The mental support I got from them during Kuttis accident cannot be expressed in words.
Suri exactly.அப்பா திட்ட மாட்டார்கள் ஆனால் அந்த பார்வை பல அர்த்தங்கள் சொல்லும். இன்றும் காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு day start பண்ணும் சுறுசுறுப்பு அப்பா நிகர் அப்பா தான்
அம்மா பொறுமையின் சிகரம்.எங்கள் வீட்டில் drivers கூட மிளகாய் பொடி தோசை தயிர் தொட்டு சாப்பிடுவார்கள். Both are very magnanimous.
Pious patient and don't
Give importance to others comments

Surya kumar: இன்று இந்த DSP குடும்பம் ஒன்றாக இருக்கிறது என்றால் பின்புலம் பெரியப்பா & பெரியம்மா . நான் 1985 முதல் 1995 வரை அங்கே வளர்ந்தவன் .பெரியம்மா என்னைப் பெற்றெடுக்காத அம்மா . சம்பத் அண்ணாவை விட என்னை மிகவும் பாசத்துடன் அன்புடன் இன்றும் கவனித்து வருகிறார்கள் .பெரியப்பா வீட்டில் வளர்த்ததால் அன்பு பாசம் மற்றும் பல நல்ல விஷயங்களை கற்றவன் . கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என அங்கே தான் தெரிந்து கொண்டேன் . பெரியப்பா Chief Engineer ஆக இருந்த போதும் மிகவும் எளிமை . Thermal ல் பெரியப்பா 3000 பேருக்கு உயர் அதிகாரி .அந்த பந்தா சிறிதும் இராது .மிகச் சிறந்த கொடை வள்ளல் . Thermal ல் பெரியப்பாவிடம் செலவிற்க்கு Rs.100 - Rs.200 வாங்காத டிரைவர் பிட்டர் லைன் மேன் போர் மேன் மிக மிக குறைவு . பெரியப்பா வெளியே கிளம்பும் போது ராணி முத்து தினசரி காலண்டர் முருகரை பார்க்கத் தவறிபதே இல்லை . பெரியம்மா பொறுமை . யார் என்ன சொன்னாலும் தன் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை. போதும் என நினைக்கிறேன் ..................
பார்வதி அத்தை சொந்த அத்தை மகனாகிய அருணாசலம் மாமாவை கரம் பிடித்தவர்கள். மாமாவிற்கு நமது தாத்தா சொந்த தாய் மாமn . இருந்தாலும் எதிரில் உட்கார்ந்து பேசினது இல்லை . அந்த அளவிற்கு மரியாதை . மாமா DCW ல் cashier என்றால் இன்றும் அனைவருக்கும் தெரியும் . இன்று அது Corporate Company CFO விற்க்கு சமமானது . மாமா மாதிரி செல் வாளி யாரும் பார்த்தது இல்லை . மாமா தாத்தாவை பார்க்க சிவ சிதம்பரத்திற்கு 1980 கால கட்டங்களில் ஆட்டோவில் தான் வருவார்கள் . அவர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்களிடம் பெரிய போட்டியே நடக்கும் . எனென்றால் ஆட்டோ காரருக்கு கௌரி சங்கரில் டிபன் உணவுக்கு மேல் அதிகம் காசு கொடுக்கும் வள்ளல் . ரம்மி சீட் ஆடுவதில் மாமாவை யாருக்கும் அடித்துக் கொள்ள முடியாது . Chain smoker. கலர் அண்ட்ராயர் வெள்ளை வேட்டி மற்றும் சட்டை மாமாவின் அடையாளம் . மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அந்த காலத்து B.A.,Jain Nagar Pillayar kovil உருவாக காரண கர்த்தா .
பார்வதி அத்தை ஓர் Finance Controller. பெரியப்பா அப்பாவிற்கு அடுத்தபடியாக கீழுர் வீட்டில் அதிக உரிமை உள்ளவர். நாங்கள் திருச்செந்தூர் சாஸ்தா கோவிலுக்கு போகும் போதெல்லாம் எங்களோடு வருவது மட்டுமல்லாமல் ஒர் Sweet செய்து எடுத்து வருவார்கள். ......
ஓர் முக்கிய பதிவு . நமது தலைமுறை மற்றும் நமது குழந்தைகளுக்கு .இந்த காலத்தில் சொந்த மாமா ளார் மாமியார் ( சில இடங்களில் அப்பா அம்மா கூட ) கவனிப்பது என்பதே அரிது . பெரியம்மா மாமியாரை மட்டுமல்லாமல் கணவரின் அத்தை மற்றும் மாமாவை ( மதுரை ஆச்சி & அருணாசலம் பிள்ளை தாத்தா ) கடைசி காலத்தில் 8 வருடங்கள் நன்றாக பார்த்துக் கொண்டார்கள . பெரியம்மா சாப்பிடுவார்களோ இல்லையோ மதுரை தாத்தாவிற்கு நேரத்திற்கு காபி , இட்லி , Juice , மதிய உணவு , Complan தரத் தவறியதில்லை . பெரியப்பாவும் தனது அம்மாலை பார்த்துக் கொண்டது போலத்தான் ( over the level ) தனது அத்தையும் மாமாளவயும் பார்த்துக் கொண்டார்கள் . Madurai Thathha has been admitted to Hospital for about 10 days. That time day time duty Periamma & Myself. After office hours Periappa used to come to the hospital and take care of Thatha through the night. Then next day as usual office. அவ்வளவு கவனித்தும் மதுரை ஆச்சி அடிக்கடி சும்மா பெரியப்பாவிடம் பெரியம்மா பற்றி தவறாக போட்டுக் கொடுப்பார்கள் . அப்படியும் பெரியம்மா don t care. She will continuously do her duty.
Sankari Akka-சங்கராச்சி பெயர் வைத்த ராசி கால் டஜன் சிங்கக் குட்டிகளை பெற்று எடுத்தவள் . I admire her knowledge a lot. During my 12th Std , I used to spent 2 hrs on one page, but the same concept can be taught by her within 5 min, that too with more understanding. & clarity. 1978 - 1983 கால கட்டங்களில் சிதம்பர நகர் இளைஞர்களின் மனதை கொள்ளை கொன்டவள். Recently I met one Tirunelveli Govt Engg College Prof. Dr. Jayanthi some how she came to know that I am from Tuticorin. she asked me about my area. The moment I said "சிவ சிதம்பரம் " immediately she asked " சங்கரி தம்பியா நீங்க " . She called her other colleagues , introduced me then said " இவங்க அக்காவிற்கு அவ்வளவு நீளமான தலை முடி . மிகவும் அழகாக இருப்பாள் . அவளைப் பார்ப்பதற்கே பசங்க சைக்கிளில் 3 A பஸ் ஸ்டாப்பில வெய்ட் பண்ணுவாங்க . எங்க அண்ணனும் அதில் ஒருத்தன் " What a open talk after about 30 years of remembrance that too from a lady in her 50 years. I am very much proud at that moment. Super fast. வீட்டுக்குப் போனால் நம்மிடம் பேசிக் கொண்டே இருப்பாள். அதே சமயம் அந்த 10 - 15 நிமிடத்தில் food ready பண்ணிவிடுவாள் .
Dr. VMS Athan..... முன்னாள் வடகரை மிராசுதார். இந்நாள் மாடி தோட்டத்து விஞ்ஞானி . பஞ்ச பாண்டவர்களில் கடைக்குட்டி . The one & only Doctorate in our family. Even though he is working in Tamil Nadu Veterinary & Animal Sciences Univ , he is not a மாட்டு டாக்டர் . Doctorate in Agronomy. Office ல் கரெக்டாக அந்த ெ கத்து maintain பண்ண தவறியதில்லை . "வேதம் புதிது " & " கருத்தம்மா " கதாநாயகன் ராஜாவின் சாயல். Not only a good planner but very good executor also. ( நாம அதுல முட்டை ) . Good Financial Controller. Very good in keeping contacts with his UG & PG classmates ( ஒரே ஒற்றுமை இது தான் ) . Good moral support for Periappa & Periamma in the recent years. Having all the qualities for a Vice Chancellor , my wish too.
=======================================================================
பெரியம்மா ,பெரியப்பா,சம்பத் மாமா., சித்தப்பா,சித்தி பற்றிய பதிவு. தேர்வுகளால் சிறிது தாமதம் ஆயிற்று.தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ஆசிரியர் என்றாலே எனக்கு தனி மரியாதை. பெரியம்மா சென்னை நகரின் சிறந்த ஆசிரியர். அவர்கள் மேல் நான் கொண்டுள்ள மரியாதையே தனி. என்றும் தன் கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவார். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அது வந்த திசையில் விரட்டி விடுவதில் பெரியம்மா கில்லாடி. இயற்பியல் உங்களை ஆசிரியராய் பெற்றது அது செய்த புன்னியம். எனக்கு ஓர் நீண்ட நாள் ஆசை உன் வகுப்பில் ஒரு தடவையாது உட்கார வேண்டும் என்று. நீங்கள் பெரியப்பாவை "ரவி " அத்தான் என்று அழைக்கும் அழகே தனி.
அடுத்து பெரியப்பா. பெரியப்பாவிடம் நான் இரசிப்பது அவர்களின் கம்பிரம். நான்ங ரமண மஹரிஷி முதல் திருவண்ணாமலை வரை அனைத்து விபரங்களை பற்றி அறிந்தது உங்கள் மூலம் தான். பெரியப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. பொறுமை , நிதானம், ஆண்மீக பற்று , அயராத உழைப்பு, என அடுக்கி்க்காெண்டே போகலாம். உங்களது நகைச்சுவை கலந்த நுன்னிய பேச்சுக்கு நான் பெரிய விசிறி.
சம்பத் மாமா:
மூகாம்பிகை கல்லூரியின் நாயகன். தலைவர் இரசிகன். நம் DSP குடும்பத்தின் ரஜினி. அம்மாவின் செல்ல தம்பி. மாமா உங்களை பற்றி அம்மா பேசிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அம்மா சொன்னதில் மிகவும் பிடித்தது , நீங்கள் +2 chemistry exam போது பேனாவிற்கு மை சரியாக உற்றவில்லை என்று அம்மாவிடம் கோபித்து கொண்டிர்கள் என்பதுதான். உங்கள் பரபலமான "Hairstyle" பற்றியும் அம்மா நிறைய கூறியது உண்டு. அந்த Hairstyle ஆல் தான் உஷா அத்தை மயங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். உஷா அத்தையிடம் இதை பற்றி கண்டிப்பாக கேட்க வேண்டும். மொத்தத்தில் நீங்கள் அமெரிக்காவின் மூகாம்பிகை ஹீரோ.
சித்தி :
வீட்டின் கடைக்குட்டி எங்கள் சித்தி. அனைவரின் Favourite. சித்தி என்பதை தாண்டி எனக்கு ஓரு தோழி என்று கூறுவதே சரி. சித்தியிடம் பேசாத விஷயங்களே இல்லை. எனக்கு சித்தியை பார்க்கும் போது எல்லாம் அம்மா நியாபகம் வந்துவிடும். சித்தியின் பேச்சு முதல் சிரிப்பு வரை அனைத்திலும் அம்மாவை காண்பேன்.அனைவரிடமும் அன்போடும் உரிமையோடும் பழகுவது தான் சித்தியின் speciality. சித்தி ஒரு பெரிய புத்திசாலி. இதை நிருபிக்கும் வகையில் சித்தி தனது 12th chemistry II volume புத்தகம் இல்லாமலே நல்ல மதிபென் பெற்றவர். சித்தி இது மட்டுமல்லாமல் நாகர்கோவிலில் இருக்கும் போது சுத்தாத இடங்களே இல்லை . இப்போ வரைக்கும் அது continue ஆகுது. பள்ளி படிக்கும் போது முழுஆண்டு விடுமுறை போது மதுரயைில் இருந்து சென்னை வருவவேன்.அப்போது பள்ளிக்கு தேவையான பாட்டிலில் இருந்து பள்ளிச் சீருடை வரை எனைத்தயும் வாங்க shopping போக சித்திதான் company.இப்பொழுது புரிந்ததா சித்தி எனக்கு ஏன் தோழி என்று.!
சித்தப்பா :
அனைத்து பெண்களுக்கும் இப்படி ஒருவர் துனைவனாக அமைந்துவிட்டால் வாழ்க்கை ஒரு வரப்பரசாதம்தான். ( சித்தி இதற்கு சான்று ). அலுவலக வேலையில் இருந்து அனைத்து வேலைகளையும் perfect ஆக செய்து முடிப்பதை பார்த்து பல முறை வியப்படைந்துள்ளேன். அதை கற்றுக்காெள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். பெரியவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட சித்தப்பா என்றுமே உதவி என்றால் முதலில் வருபவர். உங்கள் dressing senseற்கு பெரிய விசிறி நான். எங்கு சித்தி சரண் ஆதித்யா உடன் வெளியே சென்றாலும் இரு constant tickets நானும் அக்காவும் . இதனால் நாங்கள் இருவருமே வீட்டை தேடியதே இல்லை. சமீபத்தில் சித்தப்பாவுடன் விவசாயம் பற்றிய ஒரு உரையாடலின் போது அவர்களின் அறிவு திறனை கண்டு திகைத்து போனேன். சித்தப்பாவின் அறிவு புலனை வெளிபடுத்தும் வகையில் வீட்டின் மாடியில் அமைந்த பெரிய தோட்டம். சுருக்கமாக சொல்ல போனால் சித்தப்பாவிற்கு நிகர் சித்தப்பா தான்.
===================================================================
Pandian:
தெர்மல் நகர் , என் வாழ்நாளில் வசந்த காலமான நாட்கள் .தூத்தூக்குடி பேரூந்தில் உட்கார்ந்து அந்த உப்பளத்தை கடக்கும் போது அடிக்கும் உப்பு காற்று மனதிற்கு பல சந்தோஷத்தை கொடுக்கும் ...camp 2 entrance, open theater,
இன்னும் எத்தனையோ ஞாபகங்கள் ....எல்லோரிடம் தாயுள்ள கொண்ட பக்திமயமான அன்னை...
சாப்டாச்சா என எப்போதும் கேட்கும் மாமா ,தமிழ் கடவுளை தன் உள்ளதில் வைத்து பூஜிக்கும் மாமா....
என்னிடம் எல்லாவற்றையும் சொல்லும் அத்தை
அன்னதானம் ,கடவுளிடம் அளவலாது பக்தி கொண்டுள்ள ஜோடி....
உழைப்பிற்கு பாடம் கற்றும் ஜோடி
நேசம் பாராட்டுவதில் ஒருமித்த ஜோடி
ஒத்த மனமுடைய மருமகன்கள்
பாசமிகுந்த என் அத்தான் மற்றும் மதினிகள் ...
பார்வதி பெரியம்மா பெரியப்பாவை அறிந்ததில்லை
பெரியம்மா ரொம்ப வெளிப்படையானவர்கள் மனதில் பட்டதை சொல்லி விடுவார்கள்
இத்தனை காலம் பெரியப்பா இல்லாமல் இரண்டு மகன்களை ஆள்ளாக்கிய தைரியம் பெருமைப்படகூடியது
ஆறுமுகநேரியில் வீட்டின் பின்னால் இருக்கும் மணலாக உள்ள காலி மனை இன்றும் அழகு...
கல்யாண முடிந்து முதல் தடவை திருசெந்தூர் செல்லும் போது எங்களுடன் வந்தார்கள்....
கண்ணா அண்ணன் அம்மாவைப் போல் வெளிப்படையான பேச்சு....
கடைசியாக கடந்த வருடம் ஆறுமுகநேரி சென்ற போது தெரிந்து கொண்டேன் அண்ணணுக்கு ஐம்பது வயது தாண்டியாயிற்றாம்..... பார்க்க அப்படியா தெரிகிறது .!!!!
எங்களை ஆட்டோவில் ஏற்றி விட்டு காயல்பட்டணம் பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினார்கள்.....
முருகன் அண்ணன் நேர் மார் அதற்றலான பேச்சு,கணீர் குரல்
உரிமையான விசாரிப்புகள்...
அவர்களது வழித்து சீவும் hair style எனக்கு பிடிக்கும்....
அவர்களுக்கு ஏற்ற மதினி முத்தான இரண்டு பெண் குழந்தைகள் ....
சொல்லியே தீர வேண்டும் ...
முதல் பெண் ஐஸவர்யா் ரொம்ப பொறுப்பான பொண்ணு,கடந்த வருடம் அண்ணா வீட்டிற்கு சென்ற பொது அவளது காபி எங்களுக்கு கிடைத்தது....மதினி அப்போது வீட்டில் இல்லை.....
கீச்சு குரல் செல்லகுட்டி அபிராமி நல்ல வாயடி அடிக்கும் குட்டி பாப்பா...

Sankari Bharani: Ram you beat me by posting first. This togetherness among us is possible because of the open-door policy of Radha mama and welcoming heart of Kalyani Athai. Her hospitality to this day is amazing.Their magnanimity can never be beaten.

Aditya: Thatha's house has always been my second home( first home rather)
====================================================================
Ramalingam Shunmugam(siva) : "எளிமை"தான் தாத்தாவின் அடையாளம்..தாதாவும் சரி ஆச்சியும் சரி வீட்டிற்க்கு வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி "சாப்டாச்சா" என்பதுதான். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அயராது சமைக்கும் ஆச்சி. இந்ந வயதில் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதே இவர்கள் மூலம்தான் அறிந்தேன். தாத்தா தினமும் காலையில் பையை தூக்கிக்காெண்டு பாேகும்பாேது தான் நான் என் சோம்பேரிதனத்தை உணர்வேன். இதுபாேல் தாத்தா எனக்கு உணர்த்தியது பல. ஆச்சியிடம் இருந்து நான் கற்றுக்காெண்ட மிக முக்கியமான ஒன்று "பாெறுமை". எனக்கு அச்சாெல்லுக்கு பாெருள் உணர்த்தியது ஆச்சிதான்.
========================================================================
V.M. Sankaran: It s a rare phenomena you get to see a couple like them. One can experience the warmth of affection, generosity, hospitality and recognition of others in their own style. I admire them for many things which is difficult to express in words and one has to experience to know better. In that way I am lucky to be with them and interacting often. As Aditya said, it is a second home for us. We are always indebted to them mainly for the upbringing of Sundar and Aditya. Athai is an example for all of us to know the meaning of 'patience' and her motherly caring nature. Mama is known for simplicity (As already Suri said) accomodative, helpful, and the driving force behind DSP family. He is a good commander too with a clear forethought and lots of empathy. They pocess lot of qualities for us to imbibe and follow in this materialistic world.

Indu Hari: Radha Thatha...n Kalyani achi...wat comes to my mind is Radha Thatha is very close brother to Chellammal achi....when I went to their adyar house for first time,i was feeling wonderful seeing their puja room n prasadam bowls, n Kalyani achi told Thatha do puja for hours....🙏🏻🙏🏻🙏🏻
I was feeling very special as Kalyani achi n Thatha come to our arumbakkam house n did my thali perukum function on aadi pathineetam perukku in 2012.....felt so blessed n achi gave me a nonbu kayaru every year fondly....
They r always very cordial n bless us whenever v meet...

Sornam Selvaraj: Thatha Aachi veetla romba naal irunthathula neraiya kaththukitten....
Early to bed early to rise makes healthy wealthy and wise engira English proverb Ku Thatha oru living example....namma holidays na late ah paduthu late ah ezhunthirippom...but Thatha elathalayum correct ah irupparu....and Thatha thanakku or aachiku selavu alikkuratha Vida...yaarune theriyatha oruthar kettaal...kaasu udane yosikkama kudupparu...Thatha Ku panivudai pannanum na thani theramai n pakkuvam vendum....Aachi naale mattum thaan mudiyum....Aachi eh vittutu oru naal irukkurathukke thathavukku kashtam...antha alavukku Aachi mela dependency.....Aachi kaalaila samayal pannanum naala..saami koompidurathu kashtam...so saami paatu paadikitte samayal pannuvanga...athunaala veetu saapade prasadham madiri irukkum... Aachi madiri will power paarthathu illa....evlo mudilai naalum...avanga velaiya correct ah paniruvaanga...mithavangalukku helpum correct ah pannuvanga....Thatha veli padai ah ethum sollamaatanga naalum... He has high regards fr her....

KamalaKannan: அருணாச்சலம்பிள்ளைஅண்ணாச்சிபற்றி சொல்ல வேண்டும்மானால் நிறையவே சொல்லலாம்.எங்களது திருமணம் திருச்செந்தூரி அதுவும் கடைசிவெள்ளி.கூட்டம் எவ்வளவு இருக்கும் ? உறவினர்கள்அனைவரும் நெல்லை தூத்தூகுடி திரும்ப ராம் பாப்புலர் பஸ்சில்
ஏற்றி உட்கார்ந்து செல்லும்அளவுக்கு வல்லமை பெற்றவர்கள்Dcwil
அவர்களை போல் கம்பீரம் தோரனை செல்வாக்குஇனி யாரும் வர முடியாது .
ஜெயின் நகர் உருவாவதற்கே அவர்கள் முக்கிய காரணம்.பார்வதி மதனி எனக் கு மூத்த
சகோதிரி மாதிரி அவர்கள் ஆசி யுடனும் பக்க பலத்துடனு
நாங்கள32 வருடங்கள்
இருந்திருக்கிறோம்
கண்ணன் வெள்ளை உள்ளம் கொண்ட குழைந்தை.முருகன்அண்ணாச்சி யின் வடிவம்.
சிதம்பர நாதன்.ஆம் அனைவருக்கும்ௐ அவர்கள் சிதம்பரத்தில் உள்ள நாதனே!!!
நமக்கு முருகக்கடவுள் வேண்டும்.ஆனால் முருகனுக்கு வேண்டியவர்களில் இவர்களும் ஒருவர்.
அன்பு பனிவு எளிமை
நாம் பின்பற்ற கூடியவை.
சஙகிரிக்கு மாப்பிள்ளைபார்க்க உடன் சென்றது முதல் தெர்மல் மேட்டூர் சென்னை என்று இனறு வரை நான் அதிர்ஸ்ட சாலி தான்
தரையில் வரும் வண்டு பூச்சிகளை குழைந்தையைப்போல் கையில்எடுத்து வெளியில் விடும் கருணை.வணங்கிறோம்ௐௐ.
கல்யாணி அக்காஇல்லை அம்மா
ஆம் என் அம்மா பெயரும் கல்யாணி தான்.மீரா மீதும் என் மீதும் அவர்கள்வைத்துள்ள த பாசம் அன்பு அளவே இல்லைஎங்கள் இருவருக்காக அவர்கள் செய்த பிராத்தனை அதிகம்
தம்பி என்று அழைத்து
அனைவரையும் நலம் விசாரிக்கும் பண்பு.வணஙுகுகிறேன்😊🙏🏾.
அத்தான்பக்தி பற்றி நாளை தொடரும்.
ம்பத் சங்கரி சுமதி கணகா அப்பா அம்மா போல் நிறைவான வாழ் கை வாழ இறைவனை பிராத்திகிறேண்.வாழ்க வளமுடன்
நானும் பெரிய அத்தானும் திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்து மினி பஸ் முலம் கற்குவேல்
அய்யணார்கோயில்சென்றோம்.இறங்கும்போது நடத்துணரிடம் எவ்வளவுநேரம் நிற்பிர்கள் ?கொஞ்சம்waitபண்ணுங்க...நாங்க சீக்கிரம் வந்தரோம்என்று கூற
அதல்லாம்முடியாது நேரம்ஆகும் அடுத்த டிரிப்பில் வாங்கன்னு சொல்லிட்டார்.தனக்கே உரித்தான புன்னைகையுடன் ஏற்று கொண்டார்கள்
பஸ் வரத்தான் நேரம்
ஆகுமே சாமி தரிசனம் முடித்து வெளியில்
வந்தால்பஸ் நிற்கிறது.அவசரமாக வந்து ஏறினோம்.அதே நடத்துனர் சார் இப்ப ஏறாந்திங்க பத்து நிமிசம் ஆகும் டயர் பஞ்சர் ஆயிட்டு மாட்டிக்கிட்டு இருக்கோம்.என்றார்.....⛈⛈✡🕉முருகன் அருள் இதுதான்
=================================================================
Chidambaranathan: Thank you all for all for the good words spoken. Will it not be better to tell the other side also ie Things to be corrected.Every thing was possible only with the assistance of you all. Thank you I will try to inform your compliments to the so called Annapoorani also. One more person I can't forget is Author attan As Meera mappilai said he was commanding a good respect as Cashier D C W in that area friendly to everyone As Suri said he had good respect to our father It is a sorry state we lost him so early
==================================================================
Kasthuri: கீழூர் தாத்தா வீடு ஒரு குழந்தைகள் காப்பகம்.ராதா ண்ணா முதல் நான் உட்பட அங்கு வளர்ந்தோம்.மதிய உணவுத் திட்டத்தில் வந்தவர்கள் கிட்டா மணி சம்பத்.மாமா என்றால் வொய்ட் அண்ட் வொய்ட்ல் யாரையும் பொறாமைப்பட வைக்கும் கம்பீரம் கலந்த அழகு.குழந்தைகளிடம் குழந்தையாகவிளையாடுவார்கள்.சரியான புத்தகப் புழு.வெளி உலகம் தெரியாமல் தனனை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டவர்கள்.அக்கா பெரிய வீட்டு நிர்வாகத்தை திறமையாகச் செய்தவர்கள்.எத்தனை சமையல் ஆச்சி மாறினாலும் அந்த வீட்டின் தனி ருசி மாறாமல் பார்த்துக் கொண்டவர்கள்.சாம்பாரும் அவியலும் கலந்து விறகடுப்புக் காந்தலில் சுண்டிய சுண்டக்கறி ருசி இன்று எந்த ஃபைவ் ச்டார் ஓட்டலிலும் கிடைக்காது .நான் முதன் முதலில் ஏ சி பார்த்தது அக்கா வீட்டில் தான்.ஏ சி போட மாமா நாநாச்சி மூலம் தாத்தாவிடம் பெர்மிசன் வாங்கியதும் மறக்க முடியாது
....இளையதலைமுறை மக்களே நோட் பண்ணவும்.

Janaki Suri: விருந்தோம்பலில் பெரிய மாமா, பெரிய அத்தையை மிஞ்ச யாருமே இல்லை. யார் எப்போது அடையாறு போனாலும் சாப்பிடாமல் விட மாட்டார்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உபசரிப்பார்கள். எல்லோரையும் சமமாகத் தான் நடத்துவார்கள். பாரபட்சமே பார்க்க மாட்டார்கள் .நான் நிறைய விஷயங்கள் அத்தையிடம் பகிர்ந்திருக்கிறேன். அப்போது அவர்கள் கூறும் ஆறுதல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். "கல்யாணி ஆச்சி எப்படிம் மா இவ்வளவு வேலை செய்றாங்க, Chance ye illa" என்று கிருத்திகா என்னிடம் அடிக்கடி கூறுவாள். உடம்பில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் , அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் பொறுப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அத்தையின் மன உறுதியை நினைத்து நான் அடிக்கடி மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். She is really a Gem of Woman!!!😊😊😊👍🏼👍🏼 எனது பெற்றோர் என் வீட்டிற்கு வந்து நான்கு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. நான் அவங்களை ரொம்பவே miss பண்ணுகிறேன். ஆனால் எனக்கு பெரிய மாமா , அத்தை இன்னொரு அப்பா, அம்மா தான். அதனால் இப்பெல்லாம் அந்த ஏக்கம் எனக்கு பெரிதாகத் தெரிய வில்லை. மேலும் சங்கராச்சியையும் அவர்களின் இறுதிக் காலம் வரை மிகவும் அக்கறையுடன் மனம் கோணாமல் கவனித்துக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றது. பெரிய மாமாவும், அத்தையும் எல்லா நலன்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன்🙏🏽🙏🏽🙏🏽
================================================================
Kaveri: கீழூர் மாமா !எல்லோரும் சொன்ன மாதிரி சிரித்த முகம், கம்பீர தோற்றம், so lovable and a perfect pair for Chelli athai.எல்லோரையும் போல சின்ன வயதில் ஊஞ்சல் ரொம்ப பிடிக்கும். Whenever we go there I directly will reach the ஊஞ்சல். I remember mama swinging the swing for me couple of times.
Chelli athai: அழகு, அழகு, அழகு!! Super super ah saree கட்டுவாங்க! அவங்க கட்டுவதால் அந்த சேலைக்கு அழகு கூடும். அவ்வளவு பாந்தமாக கட்டுவாங்க. All her handworks..... chance ah illa. Even for lakshmi she had stitched cloth diaper and sweaters. Innovative cooking👍🏼👍🏼 This time also I got "inji ooruhai " from her. Yummy😋
Hari Athan! I always feel amazed by the relationship between appa and Hari Athan! எப்போ பார்த்தாலும் " என்னடி" என்று விசாரிப்பாங்க. I came to know only yesterday that he had completed his CA.👍🏼. Moorthy Athan won't talk much but used to get eatables from him once enter the house. Mythili akka had become close to me because of Madurai KK nagar home. Kamatchi akka a perfect pair for Moothy Athan as she balances by talking so nicely.
Didn't have so much of interaction with parathy athai mama. Remember his outlook ....undrawer, red toothed smile and chain smoking. Parathy athai யிடம் நிறைய்ய்ய்ய்ய கதை கேட்டு இருக்கிறேன். சாவி, பாக்யா, போன்ற magazines எல்லாம் அத்தை வீட்டில் தான் படித்து இருக்கிறேன். Kanna Athan always posses a smiley face and Murugan எப்போதும் வம்பிழுத்து கொண்டே இருப்பான்.

Subbulakshmi V.: During school days, for almost every vacation, we used to spend few days at Radha mama's house. Like wise, there will be other cousins who have come for vacation. We had lots of fun, playing, chatting.... Most memorable days. Athai always busy happily preparing food. For her all are equal. She is really a blessing for DSP family. I have great respect for mama.

Veda: Parvathyakka n Athan in our childhood athan bought. Rosemilk. which. Is very. costly to. all. of. us He. had a. great respect to my fatherHe. is very patient. husband for my sister is a. vellanthiyana ponnu
Kanna is very shrude in his official work but. Murugan. is. multy talented boy-
Radha anna n Madhi is a great treasure to our family..i want to disclose an incident here...in the year 1983 we lost our father in the month of may...in the same year in the month of July my husband lost his job ...there's no landline or mobile at that time.. We did not share this with anyone..but during the end of the week we received a letter from anna asking what he can do for us...that letter brought tears to our eyes for he took the place of our father...we felt that we had someone in our life to back us up... From that we took courage and moved forward in the rocky path...this was a memory that cannot be erased... Despite anna being the elder one he is the pillar for our constructed family...and am proud to be his younger sister...

Mythili Harikumar: Radha chithappa is a true friend, philosopher and guide to entire DSP family. He is the anchor person. All turn to him for advice.Kalyani chithi is so loving and affectionate. Sudhan and karthik love her cooking- sambar, pachadis, hot curries etc..
We love her and she likes us all. She is fond of Mr A.H, she calls him by his full name and always praises him for his fantastic filter coffee. Chithappa and chithi are the role models of a joint family. Both are religious and hospitable. They are made for each other.
Parvathi athai so rich but she is so simple. She is very active and religious and a voracious reader.
She always praises her chelliakka’s four children. She loves papa mathini and gomathi mathini very much. She used to pay regular visits to kelur. We enjoyed her visits and company very much. But now she is unable to come. Take care of your health athai. Both Mr A.H and Mr A.R love her strong excellent coffee in arumuganeri.
She prepares excellent laddu, palkova and gulab jamun.
Ramadurai: பெரியம்மா (பா) குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் நானும் ஒருவன். 1991 லிருந்து இன்று வரை, கடந்த 25 வருடங்களாக பாடம் பயின்று கொண்டுஇருக்கிறேன்/ இருப்பேன் (poor student )..
பெரியம்மா , பெரியப்பா இருவரும் ஒருமித்த குணம் உடையவர்கள் ....கடவுள் பக்தி, அன்பு , பொறுமை ,கொடை உள்ளம், உதவும் தன்மை , இப்படி சொல்லி கொண்டே போகலாம்...
எல்லோரும் இருவரை பற்றியும் எழுதி விட்டிர்கள்.....நான் எழுத போவது நான் பார்த்த பெரியம்மா ......
பெரியம்மாவை பற்றி .....
- நான் அவர்களின் 3 வது மகன் (சூரி 2 வது) .."இவன் எனது 3 வது மகன்" என்று தான் தெர்மல் நகர் இல் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்....(வார்த்தை யை கவனிக்க : பையன் அல்ல மகன் )
முதன் முதலில் அம்மா வை விட்டு நான் காலேஜ் படிக்க அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, என்னை அரவணைத்து கொண்ட விதம் ..
தினமும் காலையில் பாடும் 'ஜெய ஜெய தேவி .....துர்கா தேவி சரணம் ' என்ற பாடலின் ராகம் ....
exam சமயங்களில் ஞாபகமாக விபூதி வைத்து ஆசீர்வாதம் ..
நானும் , கனகாவும் சண்டை போடும்போது எனக்கு மட்டுமே சப்போர்ட் ..
தெர்மல் நகரில் பக்கத்துக்கு வீட்டு பொண்ணை 'சைட்' அடிக்க help எனக்குபண்ணியது ..(Kanaga : Rascal என்று திட்டுவது என் காதில் விழுகிறது )...
மதுரை தாத்தா வை கடைசி காலத்தில் குழந்தை போல பார்த்து கொண்ட விதம் ....
வீட்டிற்கு எதனை பேர் வந்தாலும் அரை மணி நேரத்தில் சமையல் செய்து விடும் வேகம் ...
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தாராள குணம் ....
யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றல் உடனே சாமீ ரூமிற்கு சென்று திருநீர் இட்டு விடும் கருணை ...
எப்படியாவது என்னை குண்டாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் ....
தெர்மல் நகர் ஸ்வாமி ரூம் ... ஒரு கோவில்....ரூமிற்குள் சென்றவுடன் ஒரு தெய்வீக மனம் வீசும்...
நியூ இயர் என்றால் பெரியம்மா வீடு தான். Every Jan 1 அன்று
அதி காலையில் பெரியம்மா , பெரியப்பா விடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு தான் வருடம் ஆரம்பிக்கும்....20 வருடங்களாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது ....

Unni kuttan: [18:59, 11/29/2016] Unni: வணக்கம், கடந்த 2-3 நாட்களாக நீங்கள் எல்லோரும் ஆச்சி தாத்தா பற்றி பேசியது படித்து, நானும் எனக்கு தெரிந்த சிறு விஷயங்களை கூற வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. பாடம் மாறி விட்டது என்று தெரியும் . ஆனால், இந்த arrear ஐ clear பன்ன (கல்லூரி பழக்கம் போகவில்லை 😛 ) சிதம்பரநாதன் தாத்தா மற்றும் கல்யாணி ஆச்சி பற்றி பதிவு செய்து முடித்து கொள்கிறேன். சம்பத் மாமா இந்த arrear மாணவனை மன்னிக்கவும் 😅 .
[19:02, 11/29/2016] Unni: 1⃣முதலில் ஒரு சுயநல பதிவோடு ஆரம்பிக்கிறேன் , தாத்தாவிற்கும் எனக்கும் பொதுவானவை பெயர் மட்டும் அல்ல , initial, நட்சித்திரம் ,ராசி மற்றும் தாயார் பெயரும் ஒன்று தான். எனது பாக்கியம் ,பாவம் தாத்தாவின் துர்பாக்கியம்.
சரி வாருங்கள் நாயகன் நாயகியை பற்றி பேசுவோம் , முதலில் கதாநாயகன் தாத்தா வை பற்றி பார்ப்போம் , நம் அனைவருக்கும் தாத்தாவின் கருணை குணமும்,வள்ளல் தன்மையும், ஒழுக்கமும் , கட்டுப்பாடும் , பெரியவர்கள் மீது தாத்தா வைத்த மரியாதையும் , நாம் அனைவரும் தாத்தா மீது வைத்திருக்கும் அன்பு பற்றியும் தெரியும்.எனினும் இவற்றில் சிலவற்றை தொட்டுவிட்டு ,தாத்தாவின் மறுபக்கமான நக்கல், நய்யாண்டி தனமும் , 'மன அளவு மார்க்கண்டேயன்' என்று நான் அவங்களை அழைக்கும் காரணத்தையும் பார்ப்போம் .
'அறிவு திறன் மற்றும் மேலாண்மை திறமையும்'
தாத்தாவின் அறிவு திறனையும் மேலாண்மை திறமையும் கண்டு நான் வியப்பு அடைந்தது உண்டு . நம்மில் எத்தனை பேருக்கு , என் தாத்தா ஒரு electrical engineering பட்டதாரி என்று மார்பை தட்டி கொள்ள முடியும் . எங்கள் தலைமுறையை போல் யார் வேணாலும் engineer ஆகும் engineer பற்றி நான் கூறவில்லை., அந்த காலத்திலேயே engineer ஆன சாதனையை பற்றி கூறுகிறேன் .தான் ஓய்வு பெரும் பொழுது நிர்வாகத்தின் இமயத்தை அடைந்து சாதனை புரிந்ததே அவரது மேலாண்மை திறமைக்கு சான்று . தான் வேலை பார்த்த பொழுது தான் சந்தித்த பிரச்சனைகளும், அதை சமாளித்த விதங்களும் (முக்கியமாக தனக்கு கீழ வேலை செய்தவர்களை வென்ற விதங்களும்) சுவாரசியமானவை . 'வெள்ளையனே வெட்கப்படும்' அளவிற்கு ஆங்கிலத்தில் விளையாடுவார்கள் . There is this rare mix of sophistication and simplicity in him.
[19:06, 11/29/2016] Unni: 2⃣
'எளிமை மற்றும் வள்ளல் தன்மையும்'
அப்பா தாத்தாவை பற்றி கூறும் பொழுது , அவங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு , தாத்தா M.G.R போன்றவர் என்று கூறினார்கள்.இன்று வரை அப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . தாங்கள் சாப்பிடும் அதே உணவு தான் அவங்களுக்கும் , அப்போ அப்போ செலவுக்கு கையில் காசு வேற உண்டு (உண்மையை சொல்ல போனால் படிப்பை விட்டு விட்டு தாத்தா விடம் வேலைக்கு சென்று விடலாம் என்று யோசித்தது உண்டு , இதை பற்றி தாத்தா விடம் சம்பளம் பேசியதும் உண்டு 😛) எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மையை தாத்தா விடம் இருந்து கற்று கொன்டேன் , தனக்கு வைத்து கொள்வதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது அதிகம் .இன்னும் பேச நிறைய இருப்பதால் இதை பற்றி இங்கேயே நிறுத்தி கொள்கிறேன், அடுத்தது பார்ப்போம்.
'ஒழுக்கம் '
ஓவ்யு பெற்ற பின்பும், வீட்டில் இருந்தார்களா இல்லையே . விட்டு விட்டால் இப்பொழுதே retire ஆகும் எங்கள் மத்தியில் எப்படி இப்படி 😅 ? ஓவ்யு பெற்ற பின்னால் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்து கொண்டு தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொண்டார்கள். காலையில் சூரியனுக்கு முன் எழுந்து, தவறாமல் காலையிலே குழித்து , நெல்லையப்பர் கோவில் அர்ச்சக்கரை விட அதிக நேரம் இறைவினிடம் உரையாடுவார்கள் . நேரத்துக்கு உணவு (, பசி வந்தால் கோபம் வந்து விடும் , தாத்தா விடமிருந்து எனக்கு வந்த குணம் 😋), அளவோடு சாப்பிடுவது (தாத்தாவிடமிருந்து எனக்கு வர வேண்டிய குணம் 😝 ) , வேலைக்கு சென்று வீடு திரும்பி, மீண்டும் மாலையில் கடைக்கு போக வேண்டும் என்ற சாக்கில் வெளிய சென்று விடுவார்கள் .சீக்கிரம் இரவு உண்டு விட்டு , நேரத்தோடு உறக்கம்.இருந்த இடத்தில் இருந்து நகராமல் அம்மா விடம் தண்ணி கேட்கும் நாம் தாத்தாவிடம் இருந்து கற்று கொள்ளவேண்டுயது எத்தனை🤔?
[19:13, 11/29/2016] Unni: 3⃣என்னடா இவன் தாத்தாவை பற்றி தெரிந்ததைய மறுபடியும் சொல்லி, அரைத்த மாவையே அரைகிறான் என்கிறீர்களா? சரி இது வரை பேசாத சிலவற்றை பற்றி பாப்போம் :
'நகைச்சுவை உணர்வு'
அதாவது கிண்டல் செய்யும் (கலாய்க்கும்) தன்மை , நம்புங்கள் நிறைய வாங்கிருக்கிறன் 😉 . எங்கள் தலைமுறைக்கு இணையாக ,இல்லை இல்லை எங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லொள்ளு . தாத்தாவின் காலை வாரலாம் என்று நினைத்து வம்புக்கு இழுத்தா கடைசியில் மண்ணை கவ்வுவது நாம் தான் .சில நிகழ்வுகளை பின்பு பகிர்ந்து கொள்கிறேன் .
இளமை(உள்ளத்திலும் உடலிலும்):
எனக்கு தாத்தா என்பதை விட ஒரு நல்ல நண்பனாகவே இருக்கிறார். அவரிடம் என்ன வேணாலும் சொல்லலாம், பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாததை கூட பகிர்ந்து கொள்ளலாம். தாத்தாவிடம் அரசியில் முதல் புதிய தொழில் நுட்பங்கள், நல்ல படங்கள்,ஸ்டாக் மார்க்கெட், என புதிய பழைய நடிகர் நடிகைகளை வரை பேசி இருக்கிறோம் 😉 .இயக்குனர் KB(K Balachander) ன் பெரிய ரசிகர், தாத்தாவால் அவருடைய எல்லா படங்களையும் பார்த்து நானும் KB ரசிகனாக மாறினேன்.
தன கல்லூரி கால நிகழ்வுகளும் சேட்டை சில்மஷன்களும் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார், (இங்கே கூறாததற்கு ஒரே காரணம், பதிலுக்கு என் ரகசியங்களை வெளிய விட்டு விடுவார் என்ற அச்சம் தான் 😜 )
எனக்கு rchidambaranathan@............. என்ற email id கிடைக்காமல் போனதற்கு காரணம் தாத்தா தான் , நான் email id ஒன்றை உறவாக்குவதுற்கு முன் என்னை தோற்கடித்து முந்தி கொண்டார் , அந்த அளவிற்கு முன்னோடியாக இருந்தார்கள். 'தோற்றேன் தாத்தாவிடம்'.
அடையாறில் ,நாம் எல்லாம் வெட்கம் படும் அளவிற்கு மூன்று மாடி படிகளை ஒரே மூச்சாக நிற்காமல் ஏறி விடுவார்கள். 'தோற்றேன் தாத்தாவிடம்'.
தாத்தாவிற்கு நினைவு இருக்கிறதா என்று தெரிவில்லை, ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மணி தாத்தா வீட்டிற்கு சென்று வரும் பொழுது, பேருந்துற்காக காத்திருந்தோம் , நாங்கள் நிற்கும் இடத்தில இருந்து சற்று தள்ளி நின்றது , நான் சரி போவதற்குள் பேருந்து கிளம்பி விடும் என்று மெதுவாக நடந்து திரும்பி பார்க்க தாத்தா ஓடும் பேருந்தில் ஏறி என்னை அழைக்கிறார். மறுபடியும் 'தோற்றேன் தாத்தாவிடம்'.
தாத்தாவை வண்டியில் கூட்டி சென்று வீடு திரும்பும் போது, 'நான் இதை விட பாதி நேரத்தில் வந்து விடுவேன் என்று கிண்டல் செய்வார்' , கண்டிப்பாக 'தோற்று விடுவேன் தாத்தாவிடம்'.
அனால் "தாத்தாவிடம் தோற்கும் ஒவ்வொரு முறையும் , ஒரு பெருமையான தருணம்''
[19:18, 11/29/2016] Unni: 4⃣ஆச்சி உலகின் மிக அழகிய பெண். ஆச்சி இல்லாமல் தாத்தாவின் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய இயலாது . ஆச்சி பூமி தாயை போல , அவ்வளவு பொறுமை ; ஆச்சியின் தோழில் எத்தனையோ சுமைகளையும், பொறுப்புகளையும் போட்டு கொன்டே போகலாம் , சிரித்து கொன்டே அத்தனையையும் தாங்கி கொள்வார்கள். யாருக்கும் தீங்கு நினைக்காத , எல்லோரின் நன்மையை மட்டும் நாடும் அன்பு மட்டும் நிறைந்த ஒரு பரிசுத்தமான ஆன்மா .
அது மட்டுமல்ல பலருக்கு தெரியாத ஒன்று , மிக புத்திசாலி மட்டும் படைப்பாற்றல் மிகுந்தவர்கள் ஆச்சி. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது ஒவ்வொரு விடுமுறைக்கும் ஆச்சி வீட்டுக்கு சென்றுவிடுவோம், ஒவ்வொரு மதிய உணவு வேலையுள்ளும் எங்கள் அனைவரையும் சுத்தி உட்கார வைத்து , ஒரே சட்டியில் சோறை எடுத்து , தன் திருகரங்களால் பிசைந்து , உருண்டைகளாக உருட்டி எங்கள் அனைவருக்கும் வரிசையாக கொடுப்பார்கள் , கொடுக்கும் பொழுது , முன் யோசனை செய்து வைக்காமல் மிக யதார்த்தமாக கற்பனை கதைகளை சொல்லி கொன்டே போவார்கள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்,அப்பொழுது ரொம்ப சிறுவர்களாக இருந்தமையால் பதிவு செய்ய முடியாமல் போயிற்று .ஆச்சியை போல் மிக கற்பனை சக்தி மிகுந்த படைப்பாளியை நான் கண்டதில்லை .
அது மட்டுமில்லை, ஆச்சி மிக ஆபத்தானவர்கள் .ஆமாம் சரியாக தான் படித்தீர்கள் , மிக ஆபத்தானவர்கள் . ஏனெனில் , உங்களுக்கு சாப்பாடு போட்டே சாவடித்து விடுவார்கள் 😛 . நான் ஒவ்வொரு விடுமுறையும் சென்று வீடு திரும்பும் பொழுது எல்லா பரிமாணங்களிலும் நான்கு சுத்து கூடி தான் வருவேன் 😉 .காலையில் 8 , 8.30 க்கு காலை உணவு , 11 மணிக்கு சூப்/மோர் /சாத்துக்குடி ஜூஸ் மற்றும் தாத்தா வாங்கி வைத்திருக்கும் தட்டை, முறுக்கு சீடை கலை கொறித்து விட வேண்டியது .பின்பு 1 மணி அளவில் மதிய உணவை (சாம்பார் ,கொழும்பு,ரசம், 2-3 வகை காய் ,துவையல்) சூறை ஆடிவிட்டு , ஆச்சி யின் கதை கேட்டு உறக்கம் , பின்பு எழுந்து சாயங்காலம் சிற்றுண்டி என்ற பெயரில் உப்புமா/சுண்டல்/தாத்தா வாங்கும் கட்லெட் /பால் கொழுக்கட்டை எதாவது வெளுத்துக்கட்டி விட்டு , பாவம் பூஸ்ட் என்ன பாவம் செய்தது என்று அதையும் உள்ள ஊற்றிவிட்டு, விளையாட சென்றுவிட்டு அடுத்த போர் (இரவு உணவு) க்கு தயாராக வந்துவிட வேண்டியது. இரவில் இட்லி ,தோசை ,சாம்பார், கிச்சடி,மற்றும் இரு வகை சட்னி (கண்டிப்பாக சிவப்பாக ஒரு பயங்கர சட்னி ). அதையும் அமுக்கிவிட்டு தாத்தா ஆச்சியுடன் மெகா சீரியல் பார்த்து கொண்டு,கிண்டல் செய்து பேசி கொண்டு உறங்கும் முன் ஒரு டம்பளர் பால் குடித்து விட்டு நல்ல நிம்மதியான எந்தவித கவலைகளும் இல்லாத உறக்கம்.ஒரு மனதின் கடைசியில் இதற்குத்தானே எல்லாம் செய்கிறான். இது போன்ற வாழ்க்கை நமக்கு மீண்டும் கிடைக்குமா ? சரி இருக்கட்டும் வாழ்க்கையை பற்றி ஆராய இது இடம் இல்லை. நான் கூறிய உணவு வகைகளை படிக்கவே மூச்சு வாங்குகிறது அல்லவா , இவை அனைத்தையும் தினசரி சர்வ சாதாரணமாக ஒற்றை ஆளாக கடவுள் ஸ்தோத்திரம் சொல்லி கொன்டே செய்து முடிப்பார்கள் ஆச்சி
[19:22, 11/29/2016] Unni: 5⃣தனக்கு எந்த வித வலி இருந்தாலும் கடவுளிடம் மட்டும் சொல்லிவிட்டு வேலை பார்த்துவிட்டு போகின்ற அசாத்திய உள்ளம் ஆச்சி . தன்னையே யாரவது பார்த்து கொள்ள வேண்டிய வயதில் , தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரையும் பார்த்துக்கொள்வார்கள் .
ஆச்சியும் சரி ,தாத்தாவும் சரி பக்திமான்கள் . தாத்தா எப்போ வீட்டை விட்டு சென்றாலும் தன மூக்குக்கண்ணாடியை தூக்கிக்கொண்டு ராணிமுத்து முருகனை வணங்கிவிட்டு தான் செல்வார்கள் .ஆச்சி யாருக்கு என்ன பிரச்சனைகளாக இருந்தாலும் சீட்டு ஒன்று எழுதி சாமிக்கு பின்னால் போட்டு விடுவார்கள் . இன்னொரு விஷயம் என்ன வென்றால் ஆச்சி எங்கள் அனைவரையும் பெயர் கூறி கூப்பிட மாட்டார்கள் , நாங்கள் பிறந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுளை எங்களை பார்த்துக்கொள்ள அமைத்துவிட்டு , அக்கடவுளின் பெயரால் தான் எங்களை அழைப்பார்கள், அப்படிதான் நான் 'சரவனா' (என்னை கூப்பிடும் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர்) வாக ஆனேன், அண்ணன் ஷக்தி குமார் ஆக,சிவா மாரியப்பன் ஆக,ஆதித்யா தர்மர் ஆகா,நாதன் அய்யனார் என்று ஆனார்கள் .
இருவரும் மாறி மாறி பிரார்த்திபார்கள் . விடியகாலையில் தாத்தா இறைவினிடம் வணங்குவார்கள், ஒரு 9-10 மணி அளவில் உணவெல்லாம் செய்து முடித்து விட்டு ,தாத்தாவை அனுப்பி விட்டு ஆச்சி வணங்க ஆரம்பிப்பார்கள் . அடையாறில் உள்ள கடவுள்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ, ஆம் 'அந்த கடவுள் என்ன புண்ணியம் செய்தானோ இப்படி பட்ட இருவர் அவனை மாறி மாறி வணங்க'
[19:25, 11/29/2016] Unni: 6⃣பல சினிமா கதைகளை .போலவே இவர்களும், ஆச்சியும் தாத்தா வும் இருவரும் வெளிக்காட்டாத அன்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பு தாத்தா திருச்சி வந்திருந்தபொழுது , ஆச்சி அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்து என்னிடம் தாத்தா சாப்பிட்டார்களா,மருந்து எடுத்து கொண்டார்களா என வினவுவார்கள். தாத்தா பசி தாங்கமாட்டார்கள் என்று கூறி என்னை பார்த்துக்கொள்ள சொல்வார்கள். தாத்தா மட்டும் என்ன, எந்த பண்டம், இனிப்பு வாங்கி வந்தாலும் தாங்களாகவே கொடுக்கமாட்டார்கள் ஆனால் எங்களிடம் கொடுத்து ஆச்சியிடம் கொடுக்க சொல்வார்கள் . எங்கே வெளிய சென்றாலும் உணவு உண்ண வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆச்சியை விட்டு கொஞ்சம் நாட்கள் கூட எங்கும் செல்ல மாட்டார்கள் . ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை.
ஒரு கெட்ட பழக்கம் , குடும்பத்துக்கே உள்ள ஒன்று என்று நினைக்கிறன் 😝 பேச ஆரம்பித்தாள் ஒரு வித உணர்ச்சியில் பேசி கொன்டே இருப்போம் , பேச நிறைய இருக்கிறது ,போதும் விடிந்துவிட்டது முடித்து கொள்கிறேன்.
முடிவாக , எவ்வளவு வயதானாலும் தன தாயை கூடவே வைத்து பார்த்துக்கொண்ட மகன் .தன வாழ்நாள் முழுதும் தன கணவனுக்காக வாழ்ந்த மனைவி .ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு சிதம்பரநாதன் தாத்தா, ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு கல்யாணி ஆச்சி.
அளவில்லா அன்புடன்
இர.சி

Ramadurai: பெரியப்பா .....
முருகன் அடிமைகளில் முதலாமவர் ...
மூத்த மகனுக்கே உரிய பொறுப்பு , நிதானம் , அனைவரிடமும் அன்பு
ஆகிய குணங்களை கொண்டவர் . .கூட்டு குடும்பத்தின் அருமையை உணர்த்தியவர் ....
கர்ணனின் அடுத்த வாரிசு ....
எளிமையின் இலக்கணம் ...
தமிழில் அழகாக 'ரா . சிதம்பரநாதன் ' என்று கையெழுத்து இடும் வழக்கமுடியவர் ...
அன்று - அமைதி , அதிர்ந்து பேசாதவர் ..
இன்று - கலகலப்பு , இளைய
தலைமுறையினரை
மிரள வைக்கும் கொடுக்கும் "counter specialiat "

பார்வதி அத்தை மாமவை ரொம்ப அறிந்ததில்லை ....ஆனால் , அவர்கள் கணீர் குரல் நினைவில் உள்ளது ...
அத்தையின் milk sweet கு நான் அடிமை ...திருச்செந்தூர் கோயில் செல்லும்போது அவர்கள் வீட்டில் தான் சாப்பாடு with sweets ...
அத்தை ஒரு புத்தக புழு ...எந்நேரமும் book படித்துக்கொண்டே இருப்பார்கள...
இரண்டு ஆண் சிங்கங்களின் சொந்தக்காரி..
strong personality ....

[07:17, 11/30/2016] Surya: Ravi Athan ....." மாப்ளே வா " என அன்போடு அழைப்பவர் . சாதரண குடும்பத்தில் பிறந்து தன் படிப்பால் தானும் உயர்ந்து தம்பி மார்களையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கியவர் . Very simple personality. Straight forward. யாருக்கும் எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை . செய் நன்றி மறவாதவர். தனது உயர் கல்விக்கு உத விய காமராஜ் கல்லூரி முதல்வரான திரு.செலவராஜுன் பெயரை தன் மூத்த மகனுக்கு வைத்தவர்.Basic Qualification என்னவோ M.Sc Maths , but has full knowledge in other subjects too. இன்றும் படித்துக் கொண்டிருப்பவர். He himself doesn t know how many Degrees / Certificate courses he has completed so far ( Athan figure pls ) . Next to Aruna Athai Mama he is the one who used to buy more books. Not only Maths, Science , Management , Computer courses, Internet security , Bank security etc etc....now a days e books & audio books . வானமே எல்லை . ஆன்மீகத்திலும் to the extend . சஷ்டி விரதம் ....used to stay at Tiruchendur for 6 days without food . There is no count at all for திருவண்ணாமலை கிரீவலம் . தேவாரம் திருவாசகத்தையும் விட்டு வைக்கவில்லை . Don t care for any thing . Take it easy policy. He has given full freedom to the boys. Even though he has given VRS 2 times, but IOB is not accepting it. The IOB Management don t want to leave a Good, sincere employee. I used to accompany with him in Bullet to villages in and around Vallanadu , Sekkanurani during 1990 when he was Branch Manager to collect loans, that to in Sundays. That much sincerity . கோபம் வராது . வந்தால் நியாயமாக இருக்கும் :.. ..... சங்கரி அக்கா ஜுட் .I wish him to come back to Chennai at the earliest.
[07:17, 11/30/2016] Surya: Shanmugam Athan .... ஒரே ஆண் வாரிசு. தாய் தந்தைக்கு பொறுப்புள்ள ஆண் மகன் . எனக்கு 1985 முதல் அறிமுகம் . V both had very good times at Thermal , Kanyakumari & Madurai. " சூர்ரி வா " என அந்த , ரி , ல் ஓர் அழுத்தம் இருக்கும். My four wheeler driving class mate. சின்சியர் சிகாமணி .கருமமே கண்ணாயினர் . கடமை தவறாதவர். Because of his hard work today reached AGM in SBI. எதையும் அலசி ஆராய்ந்து நிதானித்து முடிவு எடுப்பவர். ( Myself too weak. All r sudden decisions ) . குட்டிம்மா ( Nandhini ) & தம்பி ( Siva ) மேல் அளவில்லா பாசம் . Every day he used to interact with both of them nearly 15- 20 min about hour to hour happenings without fail. After that only night dinner.

Sambath: இன்றைய ஹீரோ அருணாச்சலம் மாமா: ரொம்ப தைரியசாலி, தாராள குணம் படைத்தவர்கள், தாத்தாவிடம் அவர்கள் வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாது.. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்..
மாமா தாத்தாவை பார்க்க வாரா வாரம் ஆறுமுகனேரியில் பார்க்க வருவார்கள்.. வரும்போதே ஆட்டோவில் தான் வருவார்கள்.. அந்த தோரணை, ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வந்து 10 நிமிடம் கூட இருக்க மாட்டார்கள்.. வந்து வாசலிலே தாத்தாவை பார்த்து விட்டு திரும்பி ஆறுமுகநேரி போய் விடுவார்கள்..10 நிமிடம் பார்ப்பதற்காக 3 மணி நேரம் பயணம் செயது வருவார்கள்.. அது தாத்தா மீது அவர்கள் எவ்வளவு மரியாதை, பிரியம் வைத்திருந்தார்கள் என்பதை காட்டும். இந்த பழக்கம் தான் அவர்களிடம் இருந்து எனக்கு ஒட்டி கொண்டது.. இந்தியா வரும்போது எவ்வளவு தூரம் ஆனாலும் எல்லோரையும் ஒரு 10 நிமிடமாவது போய் பார்த்து பேசிவிட்டு வந்து விடுவேன்.. என்ன ஆட்டோவிற்கு பதில் இப்போ காரில்..
சிறு வயதில் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போவேன்.. என்னை என்னடா சம்பத்து என்று பிரியமாக கூப்பிடுவார்கள்.. அப்பா கூறியது போல அவர்களை நாங்கள் மிக சீக்கிரமாகவே இழந்து விட்டோம்..
அவர்கள் பசங்க ரெண்டு பெரும் எனது சிறு வயது தோழர்கள்.. ரெண்டு பெரும் பயங்கர இன்னசென்ட்.. கண்ணா அத்தான் கணக்கர் துறையில் புலி.. மாமா இருந்திருந்தால் அவர்கள் இன்னும் அதிகம் படித்திருப்பார்கள்.. முருகனும் நானும் சிறு வயதில் அடித்த லூட்டிகள் ஏராளம்.. . அருமையான பசங்க..

No comments:
Post a Comment